ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்

In Germany, man bites off part of nose in bar brawl

In Germany, man bites off part of nose in bar brawl

மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் எதிராளியுடைய மூக்கை கடித்து துப்பி தலைமறைவாகிபோன வாலிபரை ஜெர்மன் காவல்துறையினர்  தேடி வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பிரெமென் எனும் நகரத்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில், நேற்று வாரக்கடைசி நாள்  ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

மதுபான விடுதியில் போதை கூடுதலான உள்ளூர் குடிமகனுக்கும், நார்டென்ஹாம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு குடிகாரருக்கும் வாய்த்தகராறு  ஏற்பட்டது. அந்த வாய் தகராறு அடிதடியாக மாறியது. மற்ற குடிகாரர்களின் தலையீட்டால் தற்காலிகமாக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், நார்டென்ஹாம் ஆத்திரம் அடங்காமல் உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் பாய்ந்து சென்று அவருடைய மூக்கை கடித்து குதறி அதை பிடுங்கி கீழே துப்பிவிட்டார்.

அந்த நார்டென்ஹாம் நபரை, மற்ற குடிமகன்கள் பிடிக்க முயன்ற போது, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் உடனடியாக மூக்கு கடி வாங்கிய உள்ளூர் குடிமகனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடிபட்ட உள்ளூர் குடிமகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப் பட்டதை தொடர்ந்து தப்பித்த நார்டென்ஹாம் வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

In Germany, man bites off part of nose in bar brawl

German Police said that a fight between two young men in a Bar ended painfully when one of the brawlers bit off a piece of other’s nose.

 

Related posts