103-year-old man marries 99-year-old woman in Paraguay
பராகுவே நாட்டில் உள்ள வயதான காதல் ஜோடி ஒன்று காலம் கடந்தாலும் காதல் வெற்றிபெறும் என நிருபித்திருக்கிறார்கள். சுமார் 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து தற்சமயம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில் அவர்கள் நடத்தி வைக்க திருமணம் நடைபெற்றது. பராகுவே நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் அந்நாட்டைச் சார்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா மற்றும் அவரது காதலி மார்டினா லோபஸ்.
காதலர்கள் இருவரும் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினர். அதன்பிறகு குழந்தைகள் பெற்றெடுத்து பேரப்பிள்ளைகளை கண்ட பின் சுமார் 49 ஆண்டுகளுக்கு சென்ற பின்னர் சாதாரண முறையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். எனினும், பாதிரியாரின் முன்னிலையில் அத்திருமணம் நடக்கவில்லை. இது காதலி மார்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய குறையாக இருந்திருக்கிறது. ஆகவே, இப்போது தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு, பாதிரியாரின் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட கல்யாணம் நடந்தது.
பராகுவேவில் சான்டா ரோஸாவில் அங்குள்ள தேவாலயத்தில் இந்த மூத்த புது மண காதல் தம்பதிகளின் கல்யாணம் கிருஸ்துவ முறைப்படி நடைபெற்றது. பின்னர் உற்சாகமான விருந்து உபச்சார நிகழ்ச்சி அவர்களது வீட்டில் நடைபெற்றது. காதல் மணமகள் கிறித்துவ முறைப்படி வெள்ளை நிறை நீண்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். தள்ளாத வயதில் நடக்க கூட முடியாமல் மகிழ்ச்சியோடு காதல் மணமகன் மேனுவல் வீல் சேரில் அமர்ந்தபடி தனது காதலியின் கரத்தை பற்றினார்.
இந்த கல்யாணத்திற்கு முக்கியமான சிறப்பு விருந்தினர்களாக, ஜோஸ் மேனுவல் ரெய்னா – மார்டினா லோபஸ் காதலர்களுக்குப்பிறந்த 8 பிள்ளைகள், 50 பேரக் குழந்தைகள், 35 கொள்ளுப் பேரக் குழந்தைகள், 20 எள்ளுப் பேரக் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டது தான் திருமணத்தின் சுவையான செய்தி. கல்யாணம் செய்து கொண்டால் காதல் குறைந்துவிடும் என எண்ணி இந்த காதல் ஜோடிகள், சுமார் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர், தற்போது கல்யாணம் செய்து கொண்டுள்ளார்கள். பாதிரியார் முன்னிலையில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மார்டினாவினாவின் மனக்குறை நீங்கியுள்ளதாம்.
இது குறித்து பேசிய காதல் மணபெண் மார்டினா, நான் தற்போது மிகவும் உணர்ச்சிவசபட்ட நிலையில் இருக்கிறேன். எங்கள் உறவு பாதிரியாரின் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளது என்று நினனத்து பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். காலம் கடந்தாலும் உண்மைக் காதல் என்றைக்கும் மாறாது என்று நிரூபித்துள்ளது இந்த வயதான காதல் ஜோடி.
103-year-old man marries 99-year-old woman in Paraguay
After spending many years together, most couples feel the need to make their relationship official through marriage. This man and wife in Paraguay held out for 80 years before finally deciding to marry one another at 103 and 99 respectively.