டைட்டானிக் கப்பலில் வாசிக்கப்பட்ட வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

Titanic Violin Sells For Record £900,000

Titanic Violin Sells For Record £900,000

டைட்டானிக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்த போது பயணிகளை சாந்த படுத்துவதற்காக வாசிக்கப்பட்ட வயலின் ஏலம் விடப்பட்டது. அந்த வயலின் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792 ரூபாயிக்கு ஏலம் போனது.

இங்கிலாந்தில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்ட  டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் 1,517 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிகொண்டிருந்த போது பயணிகளை சாந்தபடுத்துவதற்காக இசைக்குழுவின் தலைவர் வாலஸ் ஹார்ட்லி இந்த வயலினை பயன்படுத்தி வாசித்துள்ளார்.

இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஹார்ட்லி வாசித்த வயலின் இசை கருவி நேற்று ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் ஆரம்பமான சுமார் 10 நிமிடங்களில் ஒரு நபர் அந்த வயலின் இசை கருவியை 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.  கடந்த 2006-ம் ஆண்டில் தான் இந்த வயலின் இசை கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இசை கருவி, உண்மையாகவே மூழ்கிய  டைட்டானிக் கப்பல் விபத்தில் மரணமடைந்த ஹார்ட்லி பயன்படுத்திய வயலின் தானா என பல கட்ட சோதனை நடைபெற்றது.

அந்த வயலின் இசை கருவி இவ்வாண்டின் ஆரம்பத்தில் தான் ஹார்ட்லி பயன்படுத்திய அதே வயலின் என உறுதி செய்யப்பட்டது. ஹார்ட்லிக்கு ஜெர்மனியில் தயார் செய்யப்பட்ட இந்த வயலின் இசை கருவி அவரது வருங்கால மனைவி மரியா ராபின்சன் பரிசாக கொடுத்தது. அந்த வயலின் இசை கருவியில் நம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது வாலஸுக்காக மரியாவின் பரிசு என எழுதப்பட்டுள்ளது.

Titanic Violin Sells For Record £900,000

Titanic Violin Sells For Record £900,000

A violin that was played to calm down the passengers while Titanic sank was sold for 900,000 pounds at an auction.

Related posts