காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது பெற்ற இந்திய பெண்

Priti Rajagopalan wins commonwealth youth award

 Priti Rajagopalan wins commonwealth youth award

மிகுந்த வேகத்தில் மாசு அடைந்து வரும் உலகத்தின் சுற்றுச் சூழ்நிலையில் புதிய மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்திய பெண் செல்வி.பிரீதி ராஜகோபாலன் (வயது 23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை செல்வி.பிரீதி ராஜகோபாலன் தனது 18-வது வயதில் துவக்கினார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாகும் பொருட்களை தனித்தனியே பிரிப்பதற்காக ஒரு புதிய நவீன பயிற்சியின செல்வி.பிரீதி ராஜகோபாலன் அளித்துள்ளார்.

பிரிக்கப்பட்டு தயாரான அந்த உரங்கள் யாவும் மலிவு விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தா திட்டத்தை சுமார் 40 நகரங்களில் அவர் நடத்தி வருகிறார். இந்த திட்டத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கவும், தண்ணீரை சுத்தகரிக்கவும் பயிற்சி கொடுத்து வருகிறார்.

மேலும் செல்வி.பிரீத்தி ராஜகோபாலன் அரசு அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூக தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அவருக்கு லண்டன் காமன்வெல்த் நிர்வாகத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. அத்துடன் அவருக்கு 5000 பவுண்ட் தொகையும் பரிசாக வழங்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்ட பின் செல்வி.பிரீத்தி ராஜகோபாலன், ”இந்த விருது காற்று மண்டலத்தை தூய்மை படுத்தும் எனது நடவடிக்கையை முன்னோக்கி மென்மேலும் எடுத்துச்செல்ல ஊகம் அளிக்கிறது. மற்றும் இது மேலும் அதிகமானோரை என்னுடன் இப்பணியில் இணைக்க உறுதுணையாக இருக்கும்.

இந்த தொகையினை வைத்து சூரிய சக்தியைக்கொண்டு மிகப்பெரிய அளவிலான நகர கரிம வேளாண்மை பண்ணை திட்டத்தை ஆரம்பித்து அதன் மூலம் அந்த பகுதிகளில் உணவு உற்பத்தியை கூடுதலாக்க திட்டமிட்டுள்ளேன்.” என செல்வி.பிரீத்தி ராஜகோபாலன் கூறினார்.

Priti Rajagopalan wins commonwealth youth award

A Indian climate change activist who works with local communities and governments for environmental change has been awarded the Commonwealth Youth Award. Priti Rajagopalan, 23, received a 5,000-pound grant towards her work at a ceremony held at the Commonwealth Secretariat headquarters in London, the Commonwealth said on Saturday.

Related posts