Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday.
பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வரின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய, பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள பல ஏக்கர் மைதானத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்தார். பின்பு விழா மேடைக்கு காரில் சென்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், முதல்வர் வந்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர். 10 நிமிடம் நீடித்த சோதனையில், தேர்தல் விதிமீறி எப்பொருளும் ஹெலிகாப்டரில் இல்லை. இதுகுறித்து பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சிகளின் வாகனங்களையும் சோதனையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் சோதனையிடப்பட்டது. எந்த பொருளும் சிக்கவில்லை‘‘ என்றார்.
Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday.
இதையும் படியுங்கள்
- நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் தோல்வியுற செய்வதே என் லட்சியம் – : ஆம் அத்மி தலைவர் கெஜ்ரிவால்
- பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறை
- பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
- பொருளாதார நிபுணர் கலையரசன் விவகாரம்: FIR இல்லாமல் போலீஸ் அழைத்துச் செல்லலாமா? சட்டம் என்ன சொல்கிறது
- தமிழ்நாட்டில் நவம்பர் 4–8 மழை: IMD எச்சரிக்கை, தீபாவளி வார இறுதியில் பரவலான மழைக்கு வாய்ப்பு
← முந்தைய செய்தி: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!
அடுத்த செய்தி →: நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் தோல்வியுற செய்வதே என் லட்சியம் – : ஆம் அத்மி தலைவர் கெஜ்ரிவால்

