ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்று சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூபாய் 5730 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 21500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.எங்களுக்கும் அதே ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் 14ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Related posts