சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது .ஆனால் தற்போது 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் 320 ரூபாய்க்கும் கர்நாடகாவில் 335 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related posts