கிருஷ்ணகிரி மாணவி சுசாந்தி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம்

In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state

In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state

+2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state
தர்மபுரி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
1191 மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை +2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் தேர்வு எழுதினர். +2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15ஆம் தேதி வரை நடந்தது.
இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6% ஆகும்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள:
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் விவரங்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
மேற்கண்ட இணையதள முகவரிகளில் www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state

Related posts