obama questioned by a young lady
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றிய போது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் எழுந்து, “பிராட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பினார்.
அவர் தொடர்ந்து தனது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதனால், தனது உரையை சில நொடிகள் நிறுத்திய ஒபாமா, “நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது” என்று தெரிவித்தார்.
அப்போதும், அந்தப் பெண் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்பெண்ணை உட்காருமாறு சத்தம் போட்டனர். ஆனால், ஒபாமா குறுக்கிட்டு, “அமைதியாக இருங்கள். சற்று காத்திருங்கள்” என்று கூட்டத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கோஷம் எழுப்பிய இளம்பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, அரங்கை விட்டு வெளியேற்றினர். அதன் பின் “அந்த இளம்பெண் மிகவும் மரியாதையாகவே பேசினார். அவர் முக்கியமான விஷயத்தை எழுப்பினார்” என்று கூறிய ஒபாமா, தனது உரையைத் தொடர்ந்தார்.
பிராட்லி மேனிங் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சுமார் 7 லட்சம் பக்கங்கள் அளவுக்கு விக்கிலீக்ஸ் இணைதளத்துக்குக் கசிய விட்டதற்காக 25 வயது ராணுவ வீரரான அவருக்கு அமெரிக்க நீதிமனன்றம் 35 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அவர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாகப் பாலின மாற்றம் பெற்றுள்ளதாகவும், தன்னை இனி செல்சியா மேனிங் என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
obama questioned by a young lady
america news now