மூத்த பத்திரிகையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

Senior Journalist Mr Ramachandra adhithan died today in residence at chennai Adyar. His age is 80 years மாலைமுரசு நிர்வாக ஆசிரியரம் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். பா ராமச்சந்திர ஆதித்தனுக்கு வயது 80. தமிழர்களின் தந்தை என்று அழைக்க பட்டவரும் பிரபல பத்திரிக்கையான தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் திரு.பா ராமச்சந்திர ஆதித்தனாகும். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி எனும் ஊரில் பிறந்தவர். தனது தந்தை ஆதித்தனாரின் வழியை பின் பற்றி பத்திரிகைத் துறையினில் ஐக்கியமான இவர் மாலை முரசு என்ற மாலை நேர பத்திரிக்கையை ஆரம்பித்து அதற்கு உரிமையாளர் ஆனார். மேலும், பிறகு அவர் தேவி எனும் வார இதழ்…

Read More

9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை

9-year-old raped in Chennai சென்னையில் 9 வயது நிரம்பிய சிறுமியை 32 வயதுடைய கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். சென்னையிலுள்ள மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி திருமதி.ரோஜா பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமதி.ரோஜா தனது தாய் சகுந்தலாவை பழக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.ரோஜாவின் 9 வயது மகள்  பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியுடன் கடைக்கு போனார். மதியம் சுமார் 3 மணி அளவில் அவர்களது கடைக்கு வந்த சுரேஷ் என்ற லோடு ஆட்டோ ஓட்டுனர் சிறுமியிடம் பேசியுள்ளார். தான் அவளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி அவருடன் போகட்டுமா என பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பாட்டி பழ வியாபாரத்தில் ஆர்வமாக…

Read More

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடம் ஒன்றை, பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர் அபகரித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.) நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினுடைய தலைவர் ஆர்.முருகேசன் (நேற்று) சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சென்ற 1992-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக கழகத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பாக தொழிற்ப்பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.நடேசன் என்பவர்…

Read More

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் எரித்து கொலை

mother killed trying to save sons சென்னையில் தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஒட்டேரி அருகே இருக்கும் சுவாமிதாஸ்புரத்தில் வாழும் தண்டபாணி (வயது 40) தினமும் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகராறு செய்து வம்பு வளர்ப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி  இரவு மது அருந்திவிட்டு தகராறு செய்தார். இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சார்லஸ் மற்றும் விவேக் ஆகியோர் குடிகார தண்டபாணியை கண்டித்துள்ளனர்.  அப்போது அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி பின் அடிதடியாகி, சகோதரர்கள் இருவரும் குடிகார தண்டபாணியை அடித்து விரட்டியதாக  கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட தண்டபாணியின் உறவுக்காரர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தார்கள். இந்தி கண்டு பயந்து போன சகோதர்களின் தாயார் மோட்ஷா (வயது 48) தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்…

Read More

சென்னை திருவொற்றியூரில் பெண் கொலை மந்திரவாதி கணவன் கைது

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur. சென்னை திருவொற்றியூரில் நூர்ஜகான் (வயது 31) என்ற பெண் திங்களன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் மனைவியைக் கொலை செய்ததாக மந்திரவாதி கணவன் முகமது ரபீக் (வயது 40) செவ்வாய்யன்று  கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் சின்ன மேட்டு பாளையம் 3வது தெருவில் முகமது ரபீக் வசித்து வந்தார். கேரளாவை சேர்ந்த இவர் வீட்டில் மந்திரம், மாந்திரீகம் போன்றவைகளைச் செய்து வந்தார். இந்த கேரள மந்தரவாதிக்கு சிரியா என்ற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சிரியாவை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டார். பிறகு, திருச்சூரில் வாழ்ந்து வந்த நூர்ஜஹான் என்ற பெண்ணை கடந்த மே மாதம் இரண்டாம் தாரமாக மணம் முடித்து கொண்டார். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதிகள் இருவருக்கும் இடையே…

Read More

இந்திய திரைபட நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் பரபரப்பு

சென்னையில் நடந்த இந்திய திரைபட நூற்றாண்டு விழாவின் போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய திரைபட நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார். இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது. பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர். நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார். இது திரைபட நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர்…

Read More

காமராஜரை பற்றி தவறாக பேசியதாக நடிகர் கர்ணாஸ் வீடு முற்றுகை

Actor karnas condemed for speaking rubbish about past chief minster Kamaraj in a school function held in pallipalayam located in coimbatore district. சென்னை: பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய நடிகர் கர்ணாஸ் மன்னிப்பு கேட்க கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் சனியன்று அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். லொடுக்கு பாண்டி என்ற நகைச் சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவர் நடிகர் கர்ணாஸ். இவரது இல்லம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 5வது தெரு டபுள்யூ பிளாக்கில் உள்ளது. இங்கு இவர் கிரேஸ் என்ற மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சனி காலை அவரது வீட்டின்முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் தலைமையில் 50க்கும் அதிகமான கட்சியினர் திரண்டனர்.…

Read More

தெருவில் சுற்றி வரும் திருடர்கள் பிடிக்க காவல் துறையினர் அதிரடி

Police searching for Chain snatching thieves in chennai suburb சென்னை சுற்றி உள்ள புறநகர் நகரங்களை சுற்றி வரும் சில்லறை திருடர்களை பிடிக்க காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியான போரூர் மாங்காடு பூந்தமல்லி தாம்பரம் கூடுவன்சேரி மற்றும் வட சென்னை எண்ணூர் மணலி மாதாவரம் கொரட்டூர் செங்குன்றம் போன்ற பகுதிகளில் சில்லறை திருடர்கள் அதிகரித்து வருகின்றனர் பைக் கில் சுற்றிவரும் இந்த திருடர்கள் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு வேகமாய் பறந்து விடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும்  பலரின் பைகளை பறிப்பது மொபைல் போனை அடித்து பிடுங்குவது வட மாநிலத்தவர்களை அடித்து பணம் பிடுங்குவது என பல குற்றங்களை இவர்கள் செய்கின்றனர் இவர்களை பிடிக்க சென்னை காவல் துறையினர்…

Read More

சென்னையில் மகளின் கழுத்தை முறித்து கொன்று தந்தை தற்கொலை

transport corporation mechanic kills daughter and self சென்னை எல்டாம்ஸ் சாலை சின்னத்தம்பித் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 46). அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்பிரிவில் பணிபுர்ந்து வந்தார். இவருக்கு மனைவியும், மகள் மற்றும் மகனும் உண்டு. நேற்று காலை இவரது மனைவி சுஜாதா,  10 வயது மனுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் சுப்பிரமணியும் , மகள் ஷர்மிளாவும்  (வயது 16) இருந்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய சுஜாதா, வீட்டில் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்து விட்டது. வீட்டில் மகள் சுஜாதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கணவனோ அறையில், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட சுஜாதா கதறி  அழுதார். இவரது கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளோர் அனைவரும் வீட்டின்…

Read More

மொட்டை மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி

13 year old boy fell from terrace and dead while when playing with his dog சென்னை ராயபுரம்: தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் மொட்டை மாடியில் விளை யாடிக் கொண்டிருந்த சிறுவன், தவறி விழுந்து இறந்தான்.  இந்த சம்பவம் ராயபுரத்தில் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் பிரேம் சாய் (வயது13) ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன். பிரேம் சாய் ராயபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றின் 8ம் வகுப்பு படித்து வந்தான்.  தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் நேற்று முன் தினம் மாலை வீட்டின் மொட்டை மாடியில், விளை யாடிக் கொண்டிருந்தான் பிரேம் சாய். விளையாடி கொண்டிருந்த போது திடிரென்று கால்தவறி தடுமாறி மொட்டை மாடி யில் இருந்து தவறி விழுந்தான்.  இதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பிரேம்…

Read More