Actor karnas condemed for speaking rubbish about past chief minster Kamaraj in a school function held in pallipalayam located in coimbatore district.
சென்னை: பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய நடிகர் கர்ணாஸ் மன்னிப்பு கேட்க கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் சனியன்று அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். லொடுக்கு பாண்டி என்ற நகைச் சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவர் நடிகர் கர்ணாஸ். இவரது இல்லம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 5வது தெரு டபுள்யூ பிளாக்கில் உள்ளது. இங்கு இவர் கிரேஸ் என்ற மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சனி காலை அவரது வீட்டின்முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் தலைமையில் 50க்கும் அதிகமான கட்சியினர் திரண்டனர். அவர்கள் நடிகர் கர்ணாஸ்க்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் என்ற ஊரில் நடத்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை தவறாக பேசியதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் இல்லாவிட்டால் கர்ணாஸின் படங்கள் எதையும் திரையிட விடமாட்டோம் என கண்டனக்கோஷம் எழுப்பினார்கள்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நடிகர் கர்ணாஸ் கோவை மாவட்டம் பள்ளிபாளையம் என்ற ஊரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பொன் முத்துராமலிங்க தேவர் தமது இரண்டு ஆட்டுக்குட்டிகளை இனாமாக தந்தார் என்று பேசியுள்ளார். இந்த செய்தி ஒரு வாரப்பத்திரிகையில் கூட வெளிவந்துள்ளது என்றனர்.
இந்த முற்றுகை போராட்டம் நடந்தபொழுது காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், நடிகர் கர்ணாஸ் தமது குடும்பத்தினருடன் வெளியேறி இருந்தார் என கூறபடுகிறது. மேலும், இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
actor karnas condemed for speaking rubbish about past chief minster Kamaraj in a school function held in pallipalayam located in coimbatore district
Actor Karunas is a popular Tamil actor known for his comedian roles in Baba, Nandha, Ambasamudram Ambani, and Dindigul Sarathy. He became famous after his role in the film Nandha in 2001.