ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர் கடலில் போடப்பட்டது

Silver Ganesh sits in deep sea 20 km off city coastline சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்பட்டு பக்தர்கள்  வழிபாட்டிற்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 20கிலோ வெள்ளியாலான விநாயகர் சிலை படகு மூலமாக கடலுக்குள் கொண்டு சென்று போடப்பட்டது. நேற்று சிவசேனா மூலம் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. காசிமேடு பகுதியில் 41 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. புளியந்தோப்பு பகுதியில் 20 கிலோ எடை கொண்ட ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகர் சிலையையும் நேற்று கடலில் போடுவதற்கான ஊர்வலம் நடந்தது. குதிரை சாரட் வண்டியில் வெள்ளி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வண்டியை ராஜா வேடம்…

Read More

சென்னையில் தொழில் அதிபர் மகனைக் கடத்திய கும்பல் கைது

Kidnapped business man rescued   சென்னை ஐஸ்அவுஸ் கபூர்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவரது மகன் யாசர்அராபத் (வயது 25). இவர், பல்லாவரத்தில் தோல் கம்பெனி நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தார். அப்போது, 3 மர்ம நபர்கள் இவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்தார். மற்ற இருவர் சாதாரண உடையில் காணப்பட்டனர். இந்த மர்ம நபர்கள், வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அராபத்தை காரில் அழைத்துச் சென்றனர். ஆனால் எந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.  ஆனால் அராபத் வீட்டிற்கு அன்றையதினம் நள்ளிரவே போனில் பேசிய நபர் ஒருவர், அராபத்தை கடத்தி சிறை வைத்துள்ளோம் என்றும், ரூ.1 கோடி…

Read More

சிங்கப்பூரில் இருந்து அதிகமாக நகைகள் அணிந்து வந்தவர் கைது

pudukkottai youth from singapore was arrested in chennai airport for bringing too much of gold jewels by wearing in his body சிங்கப்பூரில் இருந்து அளவுக்கு அதிகமாக தங்கநகைகள் அணிந்து வந்திறங்கிய வாலிபரை சுங்க இலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை  மற்றும் குடியிரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) தனது கழுத்து மற்றும் கைகளில் அளவுக்கு அதிகமான அளவில் நிறைய நகைகளை அணிந்து வந்து கொண்டு வந்தார். ஆனால் அவர் கொண்டுவந்த  சூட்கேசில் நகை எதுவும் இல்லை.  ஆனால் அவர் அணிந்து வந்த எந்த தங்கநகைகளுக்கும் எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த சிசுபாலனை சுங்க இலக்கா அதிகாரிகள் தனி அறையில்…

Read More

காய்கறிகள், பழங்கள் நமது இல்லதிற்கே வந்து விற்பனை அறிமுகம்.

women self help group sell veggies and fruits for cheap rate பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணி பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் மூலமாக சுமார் 200 இடங்களில் அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்டு மலிய விலையில் உணவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே..  இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம். தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள்,…

Read More

மழையில் மிதக்கும் சென்னை- திணறும் சென்னை மாநகராட்சி

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையல் 2நாட்கலாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. மழை காரணத்தால் சென்னை தண்ணீரில் மிதக்கிறது எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அரசு இருந்ததால் வடபழனி போரூர் போன்ற நகரங்கள் தண்ணீரில் மிதக்கிறது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாலையின் நடுவே தண்ணீர் வேகமாக ஓடுவதால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது என வடபழனி மக்கள் வருத்தப் படுகின்றனர். வருடம் வருடம் மழை நேரத்தில் சாலையில் நீர்தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது     were ever in chennai rain watter only

Read More

சென்னையில் கன மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

schools and colleges closed today சென்னை மாவட்டம் முழுதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நேற்று இரவில் இருந்து சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் , திருவள்ளூர் ,  வேலூர்  மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அவர் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். English summary:  schools and colleges closed today Due to heavy rain schools and colleges closed today in chennai district. From last night heavy rain in chennai. Holiday for schools and colleges in thiruvallur and  kanchipuram districts.

Read More

மதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை

A Husband killsed his wife’s paramour near Chennai மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் பெயிண்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தவர் சதீஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடைக்கு வந்து சென்றபோது சதீஷ்– புவனேஷ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி தெரிந்ததும் சக்திவேல், மனைவியையும், கள்ளக்காதலன் சதீசையும் கண்டித்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பல நாட்கள் சக்திவேல் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வரி, பக்கத்து…

Read More

இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி சென்னை மதுரவாயலில் தொடங்கியது…

Chennai Fashion Institute(1)

Best fashion technology course in chennai இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி  நிறுவனமான “என்.சி .எப்.டி ஹைட்ஸ்” தற்போது சென்னை மதுரவாயலில் அதன் கிளையை தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முறை மற்றும் புத்தகங்களுடன் சிறந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் இங்கே உங்களுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர்களால்  பயிற்றுவிக்கப்படுகிறது . உங்கள் வெற்றியே எங்கள் குறிக்கோள் ! Best fashion technology course in chennai India’s No1 Fashion Technology Training Institute “Chennai Fashion Institute” now starts its new branch in Chennai at Maduravoyal. They provide World Class Diploma and Certificate Courses in fashion designing with books at reasonable…

Read More

சென்னை மதுரவாயலில் தாய், மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

Woman, daughter murdered at Maduravoyal, Chennai மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20). இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்து நகை–பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதற்கிடையே தாய்–மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.…

Read More

கொளத்தூர் மற்றும் ரெட்டேரியில் வியாபாரிகள் கடையடைப்பு

kolathur and retteri shops attacked by political mob கொளத்தூர் விவேகானந்தா  நகரில்  நேற்று கடைகள்  தாக்கப்பட்டதை  எதிர்த்து,  கொளத்தூர்   ரெட்டேரி  மற்றும்  அதன்   சுற்றுவட்டார பகுதிகளில்  ஏறதாழ  250 கடைகள் கதவடைப்பு  போராட்டம்  நடத்தினர் . ஞாயிற்று கிழமை  இரவு  அடையலாம்  தெரியாத  கும்பல்  ஒன்று  மெயின்  ரோட்டில்  உள்ள  10 கடைகளின்  கண்ணாடிகளை  உடைத்து  பணத்தை  கொள்ளை  அடிக்கப்பட்டதாக  வியாபாரிகள்  புகர் அளித்தனர் . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின்  மத்திய சென்னையின் தலைவர் தேவராஜ் கூறுகையில் ,தாக்குதலின் போது சில லட்சம் மதிப்புள்ள  பொருட்கள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் வியாபாரி  ஒருவர்  தாக்கப்பட்டுள்ளார் . ஆகையால்  குற்றவாளிகள் மீது  போலிசார்  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தி , ஒரு நாள் கடையடைப்பு  போராட்டம்  நடத்துகிறோம்  என்று  கூறினார் .  அதே சமயம் ,புழல் போலீஸ்…

Read More