மதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை

A Husband killsed his wife’s paramour near Chennai
A Husband killsed his wife's paramour near Chennai

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் பெயிண்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தவர் சதீஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடைக்கு வந்து சென்றபோது சதீஷ்– புவனேஷ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இதுபற்றி தெரிந்ததும் சக்திவேல், மனைவியையும், கள்ளக்காதலன் சதீசையும் கண்டித்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பல நாட்கள் சக்திவேல் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வரி, பக்கத்து தெருவில் வசிக்கும் தாய் வீட்டிற்கு 3 குழந்தைகளையும் அனுப்பி விட்டு வீட்டிலேயே கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்தார்.

இந்த நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக நேற்று முன்தினம் கணவன்– மனைவி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கோபம் அடைந்து சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

இதனால் சந்தோஷம் அடைந்த புவனேஷ்வரி கள்ளக்காதலன் சதீசை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார்.

நேற்று இரவு 1 மணி அளவில் சக்திவேல் மது போதையில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டு இருந்தது.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது மனைவியும் கள்ளக்காதலனும் கட்டிலில் அலங்கோலமான நிலையில் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

சிக்கிக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி கதவை திறந்து தப்பி ஓட முயன்றனர். சதீசை மடக்கி பிடித்து சக்திவேல் அங்குள்ள கிணற்று கயிற்றால் கழுத்தை இறுக்கினார்.

நிலைகுலைந்த சதீஷ் மயங்கி விழுந்தார். உடனே காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியில் அவரது வயிறு, கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் துடிதுடித்து இறந்தார்.

வெறி அடங்காத சக்திவேல் மனைவியையும் தீர்த்து கட்ட துரத்தி சென்றார். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து சக்திவேல் ‘100’–க்கு போன் செய்து கொலை செய்தது பற்றியும், சரண் அடைவதாகவும் கூறினார். கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுபற்றி மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டில் இருந்த சக்திவேலை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கயிறு, கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையுண்ட சதீசின் உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘மனைவிக்கும், வியாபாரி சதீசுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை கண்டித்தும் கேட்கவில்லை.

இரவு வீட்டிற்கு வந்தபோது அவர்கள் குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்தனர். இதனை பார்த்த கோபத்தில் அவர்களை தீர்த்துவிட முடிவு செய்தேன்.

சதீசை குத்தி கொன்றதை பார்ததும் மனைவி புவனேஸ்வரி தப்பி ஓடிவிட்டாள். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்து சரண் அடைந்து விட்டேன்’’ என்றார்.

ஓட்டம் பிடித்த புவனேஷ்வரி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதல் தகராறில் வியாபாரி கொலை செய்யப்பட்டு இருப்பது இன்று அதிகாலையில்தான் அப்பகுதி மக்களுக்கு தெரிந்தது.

மதுரவாயலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகை–பணத்திற்காக தாய்–மகளை மர்ம கும்பல் கொலை செய்து தப்பி விட்டனர். தற்போது மீண்டும் அதே பகுதியில் கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A Husband killsed his wife’s paramour near Chennai

A Husband killsed his wife’s paramour near Chennai with knife and surrendered to the police.

Related posts