கொளத்தூர் மற்றும் ரெட்டேரியில் வியாபாரிகள் கடையடைப்பு

kolathur and retteri shops attacked by political mob

kolathur and retteri shops attacked by political mob

கொளத்தூர் விவேகானந்தா  நகரில்  நேற்று கடைகள்  தாக்கப்பட்டதை  எதிர்த்து,  கொளத்தூர்   ரெட்டேரி  மற்றும்  அதன்   சுற்றுவட்டார பகுதிகளில்  ஏறதாழ  250 கடைகள் கதவடைப்பு  போராட்டம்  நடத்தினர் . ஞாயிற்று கிழமை  இரவு  அடையலாம்  தெரியாத  கும்பல்  ஒன்று  மெயின்  ரோட்டில்  உள்ள  10 கடைகளின்  கண்ணாடிகளை  உடைத்து  பணத்தை  கொள்ளை  அடிக்கப்பட்டதாக  வியாபாரிகள்  புகர் அளித்தனர் .
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின்  மத்திய சென்னையின் தலைவர் தேவராஜ் கூறுகையில் ,தாக்குதலின் போது சில லட்சம் மதிப்புள்ள  பொருட்கள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் வியாபாரி  ஒருவர்  தாக்கப்பட்டுள்ளார் . ஆகையால்  குற்றவாளிகள் மீது  போலிசார்  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தி , ஒரு நாள் கடையடைப்பு  போராட்டம்  நடத்துகிறோம்  என்று  கூறினார் .  அதே சமயம் ,புழல் போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில், கடைகள் தாக்கப்பட்ட  புகாரில்,பட்டகத்தி  என்ற யோகேஸ்வரன்.
(34),ஆரோன் ராஜா (24),சரவணன்(26) மற்றும்  சீனுவாசன் (40) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம் .விசாரணையின் போது,அவர்கள்  நால்வரும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் , கட்சி கூட்டத்திற்கு  நிதி வழங்காததால் கடைகளை தாக்கியதாகவும் ,அவர்கள் கூறினர் .மேலும் கட்சி தலைவர் சிலை திறப்பு விழாவிற்கு வருவதால் அதிக பணம் தேவைப்பட்டதால் உள்ளூர் கடைகளில் நிதி வசூல் செய்யும் போது சில வியாபாரிகள் பணம் தர மறுத்தால் , கோபத்தில்  நாக்கு கடைகளை தாக்கியதாக  கூறினர் என்று தெரிவித்தார் .

kolathur and retteryi shops attacked by political mob

kolathur and retteri shops attacked by political mob. Almost 250 shops remains closed on Monday, protesting the attack on shops in Vivekananda Nagar Main Road, Kolathur.

Related posts