பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு

Axis Bank Squash champion Dipika Pallikal sues Axis Bank

Squash champion Dipika Pallikal sues Axis Bank பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு தொடர்துள்ளார். சென்னையை சார்ந்த தீபிகா பில்லிகால் உலக தரவ்ரிசையில் 13வது இடத்தில் உள்ள பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையாவார். அர்ஜுனா விருது பெற்ற தீபிகா 2011ம் ஆண்டு ஹாலந்து நாட்டில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஒன்றில் பங்கேற்றார். ரோட்டார்டாமில் தான் தங்கி இருந்த அறைக்கான வாடகை பணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்த தனது ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டை தீபிகா கொடுத்தார். 2 இலட்சம் பணம் அவரது வங்கி கணக்கில் இருந்த போதும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பணம் பட்டுவாடா செய்ய இயலா நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு ஒரு வங்கியின் டெபிட் கார்டு உதவியுடன் பணத்தை கொடுத்த தீபிகா ஆக்ஸிஸ் வங்கியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது ஆக்ஸிஸ் வங்கி முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா 10 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு, தென்சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நஷ்ட ஈடு தர முடியாது என்றும் மன்னிப்பு வேண்டுமானால் கேட்க தயார் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Squash champion Dipika Pallikal sues Axis Bank

Related posts