சிங்கப்பூரில் இருந்து அதிகமாக நகைகள் அணிந்து வந்தவர் கைது

pudukkottai youth from singapore was arrested in chennai airport for bringing too much of gold jewels by wearing in his body

pudukkottai youth from singapore was arrested in chennai airport

சிங்கப்பூரில் இருந்து அளவுக்கு அதிகமாக தங்கநகைகள் அணிந்து வந்திறங்கிய வாலிபரை சுங்க இலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை  மற்றும் குடியிரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) தனது கழுத்து மற்றும் கைகளில் அளவுக்கு அதிகமான அளவில் நிறைய நகைகளை அணிந்து வந்து கொண்டு வந்தார். ஆனால் அவர் கொண்டுவந்த  சூட்கேசில் நகை எதுவும் இல்லை.  ஆனால் அவர் அணிந்து வந்த எந்த தங்கநகைகளுக்கும் எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த சிசுபாலனை சுங்க இலக்கா அதிகாரிகள் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் சுமார் 290 கிராம் எடை கொண்ட தங்க நகைகள்  அணிந்து வந்ததிருந்தார், அதன் மதிப்பிடு சுமார் 9லட்சம் ரூபாயாகும். சுங்க அதிகாரிகள் அந்த தங்க  நகைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில், தான் இந்த தங்க நகைகள் அனைத்தும் உடலில் அணிந்து வந்தால் தங்கம் கடத்துவது போல் தெரியாது என எண்ணி அனைத்தையும் தமது உடலில் அணிந்து கொண்டு வந்ததாக தெரிவித்த அவரை உடனடியாக கைது   செய்தனர்.

pudukkottai youth from singapore was arrested in chennai airport for bringing too much of gold jewels by wearing in his body

Pudukkottai  youth was arrested in the airport. He had  wore various gold jewels all over the body.

Related posts