Two former LTTE cadres arrested in chennai Mogappair சென்னை அண்ணாநகர் முகப்பேரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர்முகப்பேரில் கோல்டன்ஜார்ஜ் நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (34), கோபி (30) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மற்றும் வான்படையில் முக்கிய நிர்வாகிகளாக இருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாம். மேலும், கடந்த ஆண்டு பம்மல் சங்கர்நகரில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டபோது, இவர்கள்…
Read MoreCategory: சென்னை சிறகுகள்
மகளை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை
forcing minor daughters into prostitution, Mother sentenced சென்னை: பெற்ற மகள்களை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலை வீசியது. இதில் பலர் உடமைகளை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஆட்கடத்தல், விபசாரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நீதி பணிக்குழு, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது இந்த ஆய்வு குழுவினர், புதுச்சேரியில் ஆனந்த் என்ற விபசார புரோக்கரை சந்தித்தனர். விபசாரத்தின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக, விபசாரத்துக்கு பெண் கேட்டு ஆனந்திடம் நடித்தனர். அவர் தமிழ் என்ற மற்றொரு நபரிடம் அவர்களை அழைத்து சென்றார். அதன் பிறகு, அந்த வெளிநாட்டவர்களுக்கு கண்ணனை தமிழ் அறிமுகம் செய்து…
Read Moreசென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்பு
increasing beggars with children in chennai city இந்திய தலைநகர் டெல்லி போன்றே தமிழக தலைநகரில் அதிகரித்து வருகிறது குழந்தை வைத்து பிச்சை எடுப்பது ,சென்னை மாநகரின் சுற்றுப்புற மாநகரில் கை குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது, புறநகர் சென்னை மற்றும் வளர்ந்து வரும் சென்னை பகுதியான போரூர் பூந்தமல்லி ஆவடி தாம்பரம் கோயம்பேடு பேருந்து நிலையம் வடபழனி போன்ற நகர்ப்புறங்களில் கைக்குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. புறநகர் பகுதியான இவ்விடங்களில் சாலையில் வண்டிகள் சிக்னலை எதிர்ப்பார்த்துநின்று கொண்டு இருக்கும் பொழுது குறிப்பாக கார்கள் பைக் மற்றும் லாரிகளை 4அல்லது 5மாத குழந்தையுடன் வந்து முற்றுகை இடுகின்றனர், அவர்களிடம் பணம் கேட்பது கொடுக்கவில்லை என்றால் குழந்தையை அழவைத்து பணம் கேட்பது என அந்த குழந்தயை மழை வெயில் பாராமல் போக்குவரத்து புகையில் கொடுமை படுத்துகின்றனர். மனம்…
Read Moreகோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்
Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…
Read Moreவிஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை
arrest warrant for vijayakanth அடுத்த வாய்தாவுக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விடுத்தது. 2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, விஜயகாந்த் மீது முதல்வர் சார்பில் அரசு வக்கீல் எம்.எஸ் ஜெகன், செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 13ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1ம் தேதி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த…
Read Moreசென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: முதல்வர் அறிவிப்பு
New fee for Auto Rickshaw தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்க தொழிற்சங்கங்கள் கோரின.இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 10ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகர ராவ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 9…
Read Moreசென்னையில் கட்டுக் கட்டாக ஹாவாலா பணம் பறிமுதல்
kuruvi arrested with rs 30 lakh hawala money சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் கொண்டு வந்த குருவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்” கருவியில் பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த மர்ம நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள…
Read Moreசென்னை கோயம்பேட்டில் சாக்கு மூட்டையில் சிறுவன் கடத்தல்
6 year old boy kidnapped in Chennai சென்னை கோயம்பேட்டில் சாக்குமூட்டையில் கட்டி பள்ளி மாணவனை கடத்த முயற்சித்தாக இளைஞர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சேகர். இவர் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சேகரின் மனைவி சித்ரா. இத் தம்பதியின் மகன் முகேஷ் (வயது 6). சின்மயாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முகேஷ் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.முகேஷ் திங்கள்கிழமை இரவு சேமாத்தம்மன் நகர் 3வது தெருவில் வசிக்கும் சித்தப்பா பத்மநாபன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் முகேசுடன் பேச்சு கொடுத்து சாக்லேட் கொடுத்தாராம். அதை பெற்றுக் கொண்ட முகேஷ் சிரித்து பேசியபடி அந்த இளைஞருடன் சிறிது தூரம் நடந்து சென்றானாம். தெருமுனைக்கு சென்றதும் திடீரென அந்த…
Read Moreஐ.பி.எஸ். அதிகாரி காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார்
Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai காதலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை இடைக்காலப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி (வயது 28). தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கும்போது நானும், வருண்குமாரும் காதலித்தோம். இது எங்கள் பெற்றோருக்குத் தெரிந்து, எங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினோம். நான் சென்னைக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் வருண்குமார் தனது அடுத்த தேர்வுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும்…
Read Moreசென்னை மணலி புதுநகர் சிட்கோ வளாகத்தில் தீ விபத்து
SIDCO Industrial Complex fire in the plastic company சென்னை மணலி புதுநகர் விச்சூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியின் உரிமையாளர் முரளி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை. நேற்று இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டி சென்றனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென குடோனில் தீப்பற்றியது.இதை பார்த்த காவலாளி மணலி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் உருகி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதுதொடர்பாக மணலி, அம்பத்தூர் மற்றும் எண்ணூரில் ஆகிய இடங்களில் இருந்து 4 தீ யணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3…
Read More