ஐ.பி.எஸ். அதிகாரி காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார்

Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai

Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai

காதலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை இடைக்காலப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி (வயது 28). தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கும்போது நானும், வருண்குமாரும் காதலித்தோம். இது எங்கள் பெற்றோருக்குத் தெரிந்து, எங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினோம். நான் சென்னைக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் வருண்குமார் தனது அடுத்த தேர்வுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 2011-ம் ஆண்டு மே மாதம் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வந்தன. அதில் வருண்குமார் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் ஐ.பி.எஸ். பிரிவில் பயிற்சிக்காகச் சென்றார்.

இந்த நிலையில், திருமணம் குறித்து பேச்சுவார்த்தை எழுந்தபோது, வரதட்சணையாக 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் ரொக்கம், பி.எம்.டபுள்யூ. கார் ஆகியவற்றை கேட்டனர். இதைக் கொடுக்க எங்களால் முடியாது என்பதால், வருண்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் பேசினேன். ஆனால், அவர், என்னை மிரட்டினார். 
போலீஸ் அதிகாரியாக வந்து எங்கள் குடும்பத்தினரை கொலை செய்வதாகவும், நான் தற்கொலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன்.

நான் கொடுத்த புகாரின்பேரில், வருண்குமார், அவரது தந்தை வீரசேகரன், தாயார் கல்பனா ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி), 417 (மோசடி), 420 (ஏமாற்றுதல்), 506(1) (மிரட்டல்), பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 4, தகவல் தொடர்பு சட்டப் பிரிவு 66 ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 26-ந்தேதியன்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று வருண்குமார் மற்றும் அவரது பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், வழக்கு விசாரணை அதிகாரியான உதவிக் கமிஷனர் (வரதட்சணை தடுப்புப் பிரிவு) வசுந்தரா விசாரணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘இந்த வழக்கு தொடர்பாக வருண்குமார் உபயோகித்த லேப்-டாப், செல்போன், ‘சிம்’ கார்டுகள் ஆகியவற்றை ஒப்படைக்கும்படி கூறியிருந்தேன். ஆனால் அவர் தாக்கல் செய்த 2 செல்போன்கள் போலியானவை என்று தெரிகிறது. இதுவரை நடந்த விசாரணையில், அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது தெரிகிறது“ என்று கூறப்பட்டுள்ளது. வருண்குமாருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் துணை கோட்டத்தின் உதவி போலீஸ் சூப்பிரண்டாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவராகும்.  ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளை அவர் சரிவர பின்பற்றவில்லை. இதுபோன்ற ஒழுக்கமற்ற நபரை உயர்ந்த பதவிகளில் வைத்தால், பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டார். என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள், தீர்வுக்காக அவரை அணுக தயங்குவார்கள்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், சுதந்திரமான புலன் விசாரணை நடத்த முடியாது. இதுதொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனு மீதான விசாரணை முடியும்வரை வருண்குமாரை இடைக்கால பணிநீக்கம் செய்ய வேண்டும். அவரை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்ற தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். குற்ற வழக்கு விசாரணை முடியும்வரை வருண்குமாரை இடைக்கால பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு மற்றும் டி.பி.செந்தில்குமார் ஆஜரானார்கள். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai

News Courtesy: webdunia.com

Related posts