மகளை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை

forcing minor daughters into prostitution, Mother sentencedforcing minor daughters into prostitution, Mother sentenced

சென்னை: பெற்ற மகள்களை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலை வீசியது. இதில் பலர் உடமைகளை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஆட்கடத்தல், விபசாரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நீதி பணிக்குழு, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது இந்த ஆய்வு குழுவினர், புதுச்சேரியில் ஆனந்த் என்ற விபசார புரோக்கரை சந்தித்தனர். விபசாரத்தின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக, விபசாரத்துக்கு பெண் கேட்டு ஆனந்திடம் நடித்தனர்.  அவர் தமிழ் என்ற மற்றொரு நபரிடம் அவர்களை அழைத்து சென்றார். அதன் பிறகு, அந்த வெளிநாட்டவர்களுக்கு கண்ணனை தமிழ் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை கண்ணன், ஜெயஸ்ரீ என்ற ஜெயந்தி ராணியிடம் அழைத்துச் சென்றார். விபசாரத்துக்கு 7 பெண்கள் வேண்டும் என்று ஜெயஸ்ரீயிடம் அவர்கள் கேட்டனர். அவரும் அதற்கு சம்மதித்தார்.  அதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி 7 பெண்களை விபசார புரோக்கர்கள் அழைத்து வந்தனர். இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வெளிநாட்டவர்கள் தகவல் கூறினர். அந்த 7 பெண்களில் இரண்டு பேர் 14 மற்றும் 15 வயது சிறுமிகள். இவர்களிடம் விசாரித்ததில் இரண்டு பேருமே ஜெயஸ்ரீயின் மகள்கள் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விபசார பெண்களுக்கான பணத்தை வெளிநாட்டவர்களிடம் இருந்து வாங்கும்போது, புரோக்கர்களை அங்கு ஏற்கனவே மறைந்திருந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். 2 சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்காக மதுரையில் தனது கணவனை விட்டுவிட்டு விபசார தொழிலுக்குள் ஜெயஸ்ரீ நுழைந்ததும், பெற்ற மகள்களையே விபசாரத்துக்கு பயன்படுத்த முன்வந்ததும் தெரியவந்தது. தாயாரை பற்றிய வாக்குமூலத்தை மகள்களிடம் இருந்து வாங்கி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயஸ்ரீ, ஆனந்த், தமிழ், கண்ணன் ஆகியோர் குற்றம்சாற்றப்பட்டனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்தபோது 2010 ஆம் ஆண்டு தமிழ் இறந்துபோனார். இந்த வழக்கில் நீதிபதி மீனா சதீஷ் நேற்று தீர்ப்பளித்தார். ஜெயஸ்ரீ மீது விபசார தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய சட்டங்களின் 5 பிரிவுகளின் கீழ் சாற்றப்பட்டிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இரண்டு குற்றப்பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்ற 3 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை காலங்களை தனித்தனியாக கூட்டினால் ஜெயஸ்ரீக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வருகிறது. ஆனால் இந்த தண்டனைகளை தனித்தனியாக அல்லாமல் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். எனவே அவர் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தால் போதுமானது. அதுபோல், மற்ற இரண்டு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையில் கால அளவின் கூட்டுத்தொகை 31 ஆண்டுகளாக இருந்தது. ஏககாலத்தில் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதால், அவர்கள் ஜெயிலில் 10 ஆண்டுகள் மட்டும் இருந்தால் போதுமானது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கெளரி அசோகன் ஆஜரானார்.

English Summary:

forcing minor daughters into prostitution, Mother sentenced

CHENNAI: A 42-year-old woman, who forced her two minor daughters into prostitution, was sentenced to 10 years of rigorous imprisonment by a Mahila Court here on Friday. A mahila court on Friday sentenced a woman and two others to 10 years rigorous imprisonment and seven years rigorous imprisonment, to be served concurrently, for forcing her juvenile daughters into prostitution. Additional sessions judge Meena Sathish slapped a penalty of Rs 35,000 on Jaya Shree from Madurai and Rs 20,000 each on Kannan and Anand, both hailing from Puducherry. Another accused, Tamilvanan, hailing from Puducherry, died during the course of the trial. International Justice, an NGO, lodged a complaint with the CB-CID in 2005 alleging that Jaya Sree had forced her juvenile daughters into prostitution with the help of Kannan, Anand and Tamilvanan. Police booked them on charges of kidnapping, selling minors for the purpose of prostitution and immoral trafficking for prostitution and filed a chargesheet before the additional sessions judge on completion of the investigation. The judge passed the order after examining 14 witnesses and other evidence produced by the prosecution.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial and Residential property for sale in Chennai by Best Real Estate Company

Related posts