சென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்பு

increasing beggars with children in chennai city

increasing beggars with children in chennai city

இந்திய தலைநகர் டெல்லி போன்றே தமிழக தலைநகரில் அதிகரித்து வருகிறது குழந்தை வைத்து பிச்சை எடுப்பது ,சென்னை மாநகரின் சுற்றுப்புற மாநகரில் கை குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது, புறநகர் சென்னை மற்றும் வளர்ந்து வரும் சென்னை பகுதியான போரூர் பூந்தமல்லி ஆவடி தாம்பரம் கோயம்பேடு பேருந்து நிலையம் வடபழனி போன்ற நகர்ப்புறங்களில் கைக்குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. புறநகர் பகுதியான இவ்விடங்களில் சாலையில் வண்டிகள் சிக்னலை எதிர்ப்பார்த்துநின்று கொண்டு இருக்கும் பொழுது குறிப்பாக கார்கள் பைக் மற்றும் லாரிகளை 4அல்லது 5மாத குழந்தையுடன் வந்து முற்றுகை இடுகின்றனர், அவர்களிடம் பணம் கேட்பது கொடுக்கவில்லை என்றால் குழந்தையை அழவைத்து பணம் கேட்பது என அந்த குழந்தயை மழை வெயில் பாராமல் போக்குவரத்து புகையில் கொடுமை படுத்துகின்றனர். மனம் இறங்கும் ஒருசிலர் அவர்களுக்கு பிச்சை இடுவதால் இதனை சுலபமான வழியாக அவர்கள் பயன் படுத்தி கொள்கின்றனர். இந்த குழந்தை வைத்து பிச்சை எடுப்பவர்கள் உனமுற்றவர்கல் கிடையாது சராசரி மனிதர்கள் போல இருக்கும் இவர்கள் தன் சோம்பேறி தனத்திற்க்காக கை குழந்தைகளை துன்புறுத்துவது அந்த குழந்தையை உயிரோட கொள்வதற்கு சமம் என்பதை அறியவில்லை.காவல் துறையும் அவர்களை முடிந்தவரை அப்புற படுத்தினாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் வருவது வாடிக்கையாகிவிட்டது. சமூக விழிப்புணர்வு அமைப்புகளும் இதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. குழந்தை தொழிலாளர்களை தடுக்கும் நமது சட்டமும் அரசும் குழந்தை வைத்து பிச்சை எடுப்பதை ஏன் கண்டுகொள்ளாமல் உள்ளது.

increasing beggars with children in chennai city

images (13)

Related posts