உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் எரித்து கொலை

mother killed trying to save sons

mother killed trying to save sons

சென்னையில் தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஒட்டேரி அருகே இருக்கும் சுவாமிதாஸ்புரத்தில் வாழும் தண்டபாணி (வயது 40) தினமும் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகராறு செய்து வம்பு வளர்ப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி  இரவு மது அருந்திவிட்டு தகராறு செய்தார். இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சார்லஸ் மற்றும் விவேக் ஆகியோர் குடிகார தண்டபாணியை கண்டித்துள்ளனர்.  அப்போது அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி பின் அடிதடியாகி, சகோதரர்கள் இருவரும் குடிகார தண்டபாணியை அடித்து விரட்டியதாக  கூறப்படுகிறது.

இதனைக் கேள்விப்பட்ட தண்டபாணியின் உறவுக்காரர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தார்கள். இந்தி கண்டு பயந்து போன சகோதர்களின் தாயார் மோட்ஷா (வயது 48) தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டார். மேலும் தனது மகன்களை தாக்கினால், தான் உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். உடனே அங்கே இருந்தவர்கள், மோட்ஷாவிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி வீசியுள்ளனர்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தண்டபாணி கீழே கிடந்த தீப்பெட்டியை எடுத்து, மோட்ஷாவின் உடலில் தீயை கொளுத்தி போட்டுள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி பிடிக்கவே, அலறித் துடித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, மோட்ஷாவை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

எனினும் சிகிட்சை பலனின்றி  இறந்தார். இறக்கும் முன் மோட்ஷா கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமைச் செயலக காவல்துறையினர், கொலை வழக்கில் தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோட்ஷாவின் மகன்கள் சார்லஸ் மற்றும் விவேக்கும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

mother killed trying to save sons

Related posts