ஆப்கான் கிரிக்கெட் அணி 2015 வருட உலகக் கோப்பைக்கு தேர்வு

Afghan Cricket Creates History; Qualifies for the 2015 world cup !

 Afghan Cricket Creates History; Qualifies for the 2015 wc!

ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக உலக கோப்பை (2015) கிரிக்கெட் தொடர் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.சி.சி., சார்பில் 12வது உலக கோப்பை தொடர், 2015 பிப்ரவரி 14 தேதி முதல் மார்ச் 29 தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும்  நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.

“ஏ” பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் “பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்  என, 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

சார்ஜாவில் நேற்று முடிந்த “வேர்ல்டு கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் (ஜூன் 2011 முதல் 2013 அக்., 4), 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை (14 போட்டி) மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற அயர்லாந்து (11 வெற்றி, 24 புள்ளி) ஏற்கனவே தகுதி (“பி பிரிவு) பெற்றுவிட்டது.

2, 3வது இடத்தில் தலா 18 புள்ளிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து அணிகள் இருந்தன. நான்காவது (9 வெற்றி, 17 புள்ளி) இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான், தனது கடைசி போட்டியில் நேற்று கென்யாவை சந்தித்தது.

கென்ய அணி முதலில் விளையாடி , 93 ரன்களுக்கு , 43 வது ஓவரில் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய  ஆப்கானிஸ்தான், 20.5 வது ஓவரில், 3 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 19 புள்ளிகளுடன், பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி, 2015 உலக கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது. “ஏ பிரிவில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, உலக கோப்பை தொடருக்கு (50 ஓவர்) தகுதி பெறுவது இது தான் முதன் முறை. இதற்கு முன் 2010, 2012ல் “டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் விளையாடியது.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, 2014ல் நியூசிலாந்தில் நடக்கவுள்ள தகுதிச்சுற்று போட்டிகளின் மூலம் தேர்வு செய்யப்படும். இதில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து, கென்யா, நமீபியா, கனடா, உகாண்டா, ஹாங்காங், நேபாளம் மற்றும் பப்புவா நியூ கினியா என, 10 அணிகள் மோதவுள்ளன.

Afghan Cricket Creates History; Qualifies for the 2015 wc!

Afghan Cricket Creates History; Qualifies for the 2015 wc!

Kabir Khan, the Afghanistan national cricket team coach has said how he molded his team into a formidable side, which qualified for the ICC Cricket World Cup for the first time in the country’s history on Friday. The war-torn country’s team, which is deprived of international cricket at home for security reasons, will play in the 2015 World Cup following a seven-wicket win over Kenya at UAE Sharjah. According to the Gulf News, Khan revealed that his team had to through a lot of pressure in the last 12 months as they had to win all their games given that Ireland, Holland and Scotland were all above them, adding that the UAE, which was denied a place in the tournament, were also on the same level as them. Stating that he realized that his players were getting emotional in pressure games thereby creating a negative impact on the team, Khan said that although he was aware that they would have been denied a slot in the 2015 event if they lost a match, he made his players enjoy the pressure given their previous lack of success in similar situations. Khan further said that the players quickly learnt to handle such situations and not to lose their wickets easily even with the lack of runs, adding that he had taught the players never to be scared of losing. Believing that the big nations in the World Cup will not scare his players, Khan also said that patience is vital in 50-over games unlike Twenty 20s, adding that with patience and ability to enjoy pressures, his team can beat the big nations and put on a good show.

Related posts