சென்னை திருவொற்றியூரில் பெண் கொலை மந்திரவாதி கணவன் கைது

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur.

சென்னை திருவொற்றியூரில் நூர்ஜகான் (வயது 31) என்ற பெண் திங்களன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் மனைவியைக் கொலை செய்ததாக மந்திரவாதி கணவன் முகமது ரபீக் (வயது 40) செவ்வாய்யன்று  கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் சின்ன மேட்டு பாளையம் 3வது தெருவில் முகமது ரபீக் வசித்து வந்தார். கேரளாவை சேர்ந்த இவர் வீட்டில் மந்திரம், மாந்திரீகம் போன்றவைகளைச் செய்து வந்தார். இந்த கேரள மந்தரவாதிக்கு சிரியா என்ற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சிரியாவை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டார். பிறகு, திருச்சூரில் வாழ்ந்து வந்த நூர்ஜஹான் என்ற பெண்ணை கடந்த மே மாதம் இரண்டாம் தாரமாக மணம் முடித்து கொண்டார். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதிகள் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த திங்கள்அன்று மந்திரவாதி முகமது ரபீக்யின் இல்லத்தில் பெண் அலறும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அங்கு அருகில் வசித்து வருபவர்கள் சென்று பார்த்த பொழுது மந்திரவாதியின் மனைவி நூர்ஜகான் கத்தியினால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந் நிலையில் அங்கு இருந்த மந்திரவாதி முகமது ரபீக் தனது மனைவி நூர்ஜகான் குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்து விட்டதாகவும் அதனால் காயமடைந்து விட்டார் என்று தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து நூர்ஜகானை, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு  சென்ற போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் நூர்ஜகானின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur.
நூர்ஜகான் (வயது 31) —– முகமது ரபீக் (வயது 40)

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், தனது மனைவியை தான் கத்தியால் குத்திக் கொன்றதை மந்திரவாதி முகமது ரபீக் ஒத்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மந்திரவாதி முகமது ரபீக்கை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் செவ்வாய்க்கிழமை அவரை சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur.

Mohammad rafiq of Kerala was living with his second wife Noorjahan after the divorce of his first wife. He was quarrelleing with his second wife noorjahan often. On monday, Wizard Mohammad Rafiq killed Noorjahan. He was arrested by police and he accepted the guilty in the investigation.

Related posts