வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி

income tax raid in director lingusamy office in chennai

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சோதனை முடிந்து அதிகாரிகள் முக்கிய பைல்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சோதனை நடந்தபோது லிங்குசாமியோ, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸோ அலுவலகத்தில் இல்லை.

லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஏன்? என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

வெறும் இயக்குனராக இருந்த லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி எழில் இயக்கத்தில் தீபாவளி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அவரது தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளியைத் தொடர்ந்து பட்டாளம், பையா, வேட்டை, வழக்கு எண் 10/9, கும்கி, ஆகிய படங்களை தயாரித்தார். இதில் பட்டாளம் தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான்.

தற்போது சற்குணம் இயக்கத்தில் மஞ்சப்பை, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி படங்களை தயாரித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இதுதவிர லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒரு படமும், கமல் நடிக்க ஒரு படமும், சீனுராமசாமி, ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கத்தில் தலா ஒரு படமும் தயாரிக்க இருக்கிறார்கள்.

இன்னும் சில படங்களை விநியோகிக்க இருக்கிறார்கள். இப்படி முன்னணி தயாரிப்பு நிறுவனமாகிவிட்ட திருப்தி பிரதர்ஸ் பற்றி யாரோ வருமானவரித் துறைக்கு தகவல் தட்டிவிட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

வருமானவரி கட்டாமல் ஏமாற்றப்பட்டுள்ளதா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சோதனை முடிந்து அதிகாரிகள் முக்கிய பைல்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் சோதனை நடந்தபோது லிங்குசாமியோ, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸோ அலுவலகத்தில் இல்லை.

லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஏன்? என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

வெறும் இயக்குனராக இருந்த லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி எழில் இயக்கத்தில் தீபாவளி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அவரது தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளியைத் தொடர்ந்து பட்டாளம், பையா, வேட்டை, வழக்கு எண் 10/9, கும்கி, ஆகிய படங்களை தயாரித்தார். இதில் பட்டாளம் தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான்.

தற்போது சற்குணம் இயக்கத்தில் மஞ்சப்பை, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி படங்களை தயாரித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இதுதவிர லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒரு படமும், கமல் நடிக்க ஒரு படமும், சீனுராமசாமி, ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கத்தில் தலா ஒரு படமும் தயாரிக்க இருக்கிறார்கள்.

இன்னும் சில படங்களை விநியோகிக்க இருக்கிறார்கள். இப்படி முன்னணி தயாரிப்பு நிறுவனமாகிவிட்ட திருப்தி பிரதர்ஸ் பற்றி யாரோ வருமானவரித் துறைக்கு தகவல் தட்டிவிட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

income tax raid in director lingusamy office in chennai

வருமானவரி கட்டாமல் ஏமாற்றப்பட்டுள்ளதா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

income tax raid in director lingusamy office in chennai

income tax ride in director lingusamy office. Income tax officials have launched raids & special inspections at Cinema Director Lingusamy’s house and office in Chennai.
.

Related posts