சன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை

Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வயது நிரம்பிய பெண் குழந்தை எரித்து கொலை

2 year old girl child killed brutally in Srivilliputhur over the vengeance of illegal contact of the child’s father with his neighbor  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடைய கணவன் மனைவியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தார்கள். மேலும் இந்த கொலையில்  தொடர்புள்ளவர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்பட்டியின் கீழத்தெருவைச் சார்ந்தவர் திரு. எஸ்.கண்ணனுடைய மகன் திரு.சங்கர். திரு.சங்கர்,அங்குள்ள மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் வேன் நடத்துனர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.செல்வி. இந்த தம்பதியருக்கு கருப்பசாமி (வயது 5) என்ற மகனும், இந்து காவியா (இரண்டே…

Read More

முட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டி

Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced  பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான…

Read More

மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை

Baby born after brain dead mother kept alive for three months மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை : ஹங்கேரியில் ஒரு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சுமார் 92 நாட்கள் வயிற்றிலே வளர்த்து பிரசவிக்கச் செய்து ஹங்கேரி நாட்டு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து…

Read More

மரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்

environmental activist married a tree in Argentina சராசரியாக ஓர் மனிதன் நாள் ஒன்றுக்கு 3 சிலிண்டர்களின் அளவு ஆக்ஸிஜனை சுவாசம் செய்கிறான். தற்சமயம் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை ருபாய் 700/- ., 3 சிலிண்டர் விலை ருபாய் 2100/-. ஓர்  வருடத்திற்கு ருபாய் 7,66,000/- க்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஓர்  மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 வருடம் எனில் ரூபாய் 5 கோடிக்கு மேல் போகிறது., இப்படி விலை உயர்ந்த, மதிப்பு கூடுதலான  சுவாச காற்றை உயிரினங்களுக்காக இலவசமாக பச்சை மரங்கள் தருகின்றன. ஆக நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள் இயற்கை மனித இனத்திற்கும் என்னய்யா உயிர் இனங்களுக்கும் தந்த பொக்கிஷம் என்பதையும் மனிதர்கள் உணரும் விதத்தில் ஓர் புதிய முயற்சியை எடுத்தார் பெரு…

Read More

இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு

India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…

Read More

கொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.

British PM’s sudden rendezvous, savours famous Kolkata street food! மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதமர் ஓர் தெரு ஓரக்கடையில் வடையை வாங்கி சாப்பிட்டது அங்கே இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு.டேவிட் கேமரூன் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு போனார். அவரது அந்த பயணத்தின் நடுவே ஜோகாவில் இருக்கும் ஓர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடினார். அதற்கு பின், தூதரக அதிகாரிகளுடன் மத்திய கொல்கத்தாவில் உள்ள தெருக்கடைக்கு சென்று வண்டியை விட்டு இறங்கி. ‘விக்டோரியா வடா ஷாப்’ என்னும் கடைக்கு சென்றார். கொல்கத்தாவின் தெருக்கடை உணவை சுவைக்க நினைத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவரே…

Read More

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பரவும் புதிய நோய்

தமிழக அரசின் இலவச திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து வாங்கிய மாடுகளால்தான் கோமாரி நோய் பரவியதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால்தான் கோமாரி நோய் பரவியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன. கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வருமானத்தை பெருக்கவும் அரசு விலையில்லா மாடுகளை வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்…

Read More