அமெரிக்க உளவுதுறையின்(NSA) போக்கு: அமெரிக்காவிற்கு அவமானம்

Information to Cause us Government Worst Damage in History.

வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ”இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது” என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார்.

உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிரிட்டனில் தற்போது தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கார்டியன் பத்திரிக்கையின் கட்டுரையாளர் க்லீன் க்ரீன்வேர்ல்ட் கூறுகையில், அமெரிக்காவிற்கு சேதம் ஏற்படுத்த அனைத்து சாத்தியங்களும் ஸ்னோடெனிடம் உள்ளது, எனவே ஸ்னோடென் விவகாரத்தில் அமெரிக்க அரசு தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் இது ஸ்னோடெனின் நோக்கம் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அவரது கண்கள் எல்லாம் உலக மக்களின் தனிநபர் சுதந்திரமே, உலக மக்கள் தொழில்நுட்ப பங்கீடு என்ற ஈடுபாட்டில் தங்களை தாங்களே வெளிப்படுத்தி கொள்ள முன்வரும் நோக்கத்தை ஏற்படுத்தகூடிய அளவில் மென்பொருள் நிறுவனங்களை அமெரிக்க அரசு தனது கைபாவையாக உபயோகித்துவருகிறது. ஸ்னோடெனிடம் இதனை நிரூபனம் செய்ய ஆயிரக்கணக்கிலான கோப்புகள் உள்ளது. அவை ஸ்னோடெனால் அம்பலப்படுத்தப்படுமானால் அமெரிக்காவின் வரலாறு சிரித்துவிடும். மேலும் இந்த கோப்புகளை படிக்கும் எந்த ஒரு தனி நபரும் அமெரிக்க உளவுதுறையின்(NSA) இழிவு போக்கை துரிதமாக கணித்து விட முடியும் என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.

Information to Cause us Government Worst Damage in History

Related posts