பீகாரில் பள்ளியில் மதிய உணவு: 16 குழந்தைகள் பலி

16 children dead after mid-day meal in Bihar

பாட்னா – பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவுண்ட 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம்  நாடு முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சரண் மாவட்டத்தினைச் சார்ந்த ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த  பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி இது பற்றி விசாரணைச் செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகள் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவினையும் அவர் நியமித்துள்ளார். இந்தியாவில் ஏறத்தாழ 13 கோடி மாணவர்கள் ஆரம்ப பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதற்கு முன்பாக கோவாவில் 23 குழந்தைகளும், ஒரிஸாவில் 30 குழந்தைகளும், டெல்லியில் 40 குழந்தைகளும் பள்ளியில் மதிய உணவுண்ட பின் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் வறுமையின் காரணமாக பள்ளியிலிருந்து நின்றுவிடக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது அரசுகளின் கடமையாகும்.

16 children dead after mid-day meal in Bihar

At least nine school children died and several others were ill on Tuesday after eating a midday meal at a school in Bihar, the human resource development (HRD) ministry said. PTI put the death toll at 16, citing local police. The students at a government primary school in Saran district were between eight and 12 years of age. The ministry, which administers the welfare scheme through state governments, has sent an official to the spot to assess the situation, it said in a statement. Bihar chief minister Nitish Kumar has set up a committee to inquire into the incident and has announced a compensation of Rs.2 lakh each to the families of the deceased.

Advertisements:

Flats, plots, factories, buying, selling, lease and Joint venture in chennai: Contact : www.bestsquarefeet.com

Related posts