Tamil tiger leader Prabakaran Birthday celebration banned in srilanka even after 4 years of his dealth கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவீரர் தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக நீடிக்கிறது. எனவே, புலிகளைக் கொண்டாடும் எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. “பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்பும் பணிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டால் சட்டப்படி அது…
Read More புலிகள் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு திடீர் தடைCategory: செய்தி சிறகுகள்
நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய…
Read More நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்
Rs 22,000 crore bribe paid on roads every year அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளுக்கு ரூ.22,000 கோடி வரை லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது. லூதியானா, டெல்லி, அகமதாபாத், இண்டோர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சுமார் 1,200 டிரக் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் சாலையில் செல்லும் டிரக், கன ரக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ரூ.22,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களின் 77 சதவீதம் பேர் தங்களுக்கு போலீசாரால் தொல்லை ஏற்படுவதாகவும், 73 சதவீதம் பேர் போக்குவரத்து துறை…
Read More வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
More than 11000 Children killed in Syria Civil War சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர் துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை…
Read More சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலிநடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?
சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:– காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து…
Read More நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி
வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம். ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம். செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும்…
Read More வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதிசாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?
மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான். மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த…
Read More சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்
11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…
Read More 5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..
Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில் மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர் ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…
Read More நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…
DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state” “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:- அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச்…
Read More தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…