கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன

3-year-old boy brutally beaten up by tutor in Kolkata கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்களது 3 வயது ஆண் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தர டியூஷன் ஆசிரியை ஒருவரை கடந்த ஜூலை 15 ஆம் தேதி நியமித்தனர். இவர் தினமும் மாலை குழந்தைக்கு பாடங்கள் சொல்லித் தந்தார். டியூஷனுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குழந்தையை தினமும் அறைக்குள் அழைத்து சென்றதும் கதவை ஆசிரியை பூட்டிக் கொள்வார். பின்னர், குழந்தையை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். தினமும் குழந்தை அழும் சத்தம் கேட்ட பெற்றோர், ஆசிரியையிடம் விசாரித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றார்.இதையடுத்து, அறையில் இருந்த ரகசிய கேமரா பதிவுகளை பெற்றோர் பார்த்தனர். அதில், அந்த ஆசிரியை தினமும்…

Read More

அல்ஜீரிய நாட்டு விமானம் விபத்து 116 பேர் பலி

Air Algerie flight with 116 people crashes over Africa: Reports சற்று முன்பு மாயமானதாக சந்தேகிக்கப்பட்ட அல்ஜீரிய விமானம் விழுந்து ஓட்டிச் சென்ற விமானிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 116 பேர் உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட ஏ.எச்.5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது. விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், பணியாளர்கள் 4 பேர், பயணிகள் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும். நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர். மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில்…

Read More

மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை”

Students in Road Safety Corps மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை” திருப்பூரில்,மாணவர்களை ஈடுபடும் போக்குவரத்துசீரமைக்கும், “சாலை பாதுகாப்பு படை” நேற்று தொடங்கப்பட்டது. இதில், 360 மாணவ, மாணவியர்முதல் கட்டமாக இணைத்துள்ளனர். மேலும், 108 பள்ளிகளிலிருந்து 2,000 மாணவ, மாணவியர்களை இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூர் நகர்ப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவர்களை போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடுத்தப்படும், “சாலை பாதுகாப்பு படை” (ஆர்.எஸ். பி.,) துவக்க விழா, நேற்றுநஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், முன்னிலையாக முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பங்கேற்றார். இதனை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய்: மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தலைமை வகித்துபேசியதாவது: திருப்பூர் நகரமக்களின் தொகை 8.78 லட்சமாகும். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து…

Read More

தெலங்கானாவில் பேருந்து மீது ரயில் மோதி விபத்து 25 குழந்தைகள் பலி

25 students among 26 killed as train hits school bus in Telangana தெலுங்கானாவில் பள்ளி வாகனம் மீது நான்தத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 25 குழந்தைகள், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரானில் உள்ளது ககடியா பள்ளி. அந்த பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை 40 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது. செல்லும் வழியில் மசைபேட்டை கிராமத்தில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நான்தத் பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளில் 20 பேர் பலியாகினர், டிரைவரும் பலியானார். இந்த விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 குழந்தைகள் சிகிச்சை…

Read More

உலக அளவில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறவது இடம் ஐ.நா சுட்டிக் காட்டிவுள்ளது

India Home to One in Every Three Child Brides in World: United Nations உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது ஐநா அமைப்பு. கிட்டதட்ட 42 சதவீத குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ளது ஐநா சபையின் ஆய்வறிக்கை. அதில் முக்கியமாக குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் “டாப் 10” நாடுகளில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “யூனிசெப்” எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட “குழந்தை திருமணம் ஒழிப்பு” என்ற ஆய்வறிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18 ஆம் வயதை அடைவதற்கு…

Read More

ஆந்திர மாநிலத்தில் பார்வையற்ற மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

Visually challenged students thrashed by teacher in Kakinada ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில், 3 பார்வையற்ற மாணவர்களை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 3 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், ஆசிரியர் 3 பார்வையற்ற மாணவர்களை கதறக் கதற பிரம்பால் அடித்து நொறுக்குகிறார். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் துடிதுடித்து அலறுகிறார்கள். அவர்களில் ஒருவரை பிடித்து ஆசிரியர் தரையில் தூக்கி வீசுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டாலும், நேற்றுதான் வெளியானது. இதனை பார்த்தவர்களின் பலர் கடும் ஆத்திரம் அடைந்ததால், ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டது.இது குறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், பார்வையற்ற மாணவர்களை…

Read More

இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் உள்ள மாநிலம் ; தமிழகம் முதலிடம்

7 people commit suicide every day due failure examination இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 16,112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 3-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 14,957 கடந்த ஆண்டு…

Read More

298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது

Malaysian Flight carrying 298 People crushes in Ukraine 298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் அதைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகிய உள்ளன. நேற்றுஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை சண்டையிடும் பகுதிக்கு மேலே வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையின் வசமுள்ள ஹிராபோவ் கிராமத்தில் உடல்கள் சிதறியுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளை நடத்துவதற்காக 3 நாட்கள் போரை நிறுத்துவதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது வெடித்தது இந்த விமானத்தின் ரகம் போயிங் 777,200 இஆர். பல கிலோ மீட்டர் தூரம் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், அடையாளம் காணாத அளவுக்கு சிதறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு நடக்கும்…

Read More

உக்ரைன் வான் பகுதியில் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 298 பேர் பலி

Malaysia Airlines plane with 298 on board crashes over Ukraine near Russian border உக்ரைன் வான் பகுதியில் 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து நேற்று கோலாலம்பூர் நோக்கி மலேசியாவுக்கு சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைனுக்கு கிழக்கே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் சண்டையிட்டு வரும் பகுதிக்கு மேலே பறந்த போது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹிராபோவ் என்ற கிராமத்தில் உடல்கள் சிதறி கிடப்பது தெரியவந்துள்ளது. இது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் வசம் உள்ள பகுதியாகும். தற்போது இந்த பகுதியில் விமான மீட்பு பணிகளை நடத்துவதற்கு உதவியாக 3 நாட்கள் போர் நிறுத்தத்தை கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.…

Read More

நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Case regarding legalization of Mercy Killing in Supreme Court நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குணப்படுத்தவே முடியாத நோயால் துண்புருவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் கூறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், “காமன் காஸ்” தொண்டு நிறுவனம் ஒன்று, மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள நோயாளிகளை அவர்கள் விருப்பினால், கருணைக் கொலை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு கொடுத்துள்ளது. இந்த மனு, அரசியல் சாசன அமர்விலுள்ள ஆர்.எம்.லோதா, ஏ.கே.சிக்ரி, சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் முன்பு வந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாரர் சார்பில் ஆஜரானார். அவர், “உச்ச நீதிமன்றத்தில் முன்பே இந்த…

Read More