Students in Road Safety Corps
மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை”
திருப்பூரில்,மாணவர்களை ஈடுபடும் போக்குவரத்துசீரமைக்கும், “சாலை பாதுகாப்பு படை” நேற்று தொடங்கப்பட்டது. இதில், 360 மாணவ, மாணவியர்முதல் கட்டமாக இணைத்துள்ளனர். மேலும், 108 பள்ளிகளிலிருந்து 2,000 மாணவ, மாணவியர்களை இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூர் நகர்ப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவர்களை போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடுத்தப்படும், “சாலை பாதுகாப்பு படை” (ஆர்.எஸ். பி.,) துவக்க விழா, நேற்றுநஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், முன்னிலையாக முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பங்கேற்றார். இதனை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய்:
மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தலைமை வகித்துபேசியதாவது: திருப்பூர் நகரமக்களின் தொகை 8.78 லட்சமாகும். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்க்கும் மேலுள்ளது. இங்கு தெவைக்கு அதிகமாகஒரு வீட்டில் பல வாகனங்கள் உள்ளன. அனைவரும், வேகமாக செல்ல நினைக்கின்றனர். ஆனால், யாரும் வேகம் விவேகமானதல்ல என்பதை புரிந்துக்கொள்வதில்லை. திருப்பூரில் நடக்கும் பல விபத்துகள், உயிர் பலிகளில், தேவையற்றவை, புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இவற்றைத் தவிர்க்கலாம்.ஹெல் மெட் உபயோகத்தை கட்டாயமாக்குவதில், மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பெற்றோர்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முதலில் ஆர்.எஸ்.பி., மாணவர்களுக்கு, போலீசார் மற்றும் டிராபிக் வார்டன்கள் பயிற்சி அளித்து, உதவியாக இருப்பார்கள். ஜாக்கிரதையாகவும், சேவை மனப்பான்மையுடனும் ஈடுபட வேண்டும். சீருடை, விசில், தொப்பிஆகியவைகள் வழங்கப்படும். உங்கள் முயற்சியால், நிச்சயம் விபத்துகள் குறையும். போலீசார்களும் நிம்மதியாக இருக்கலாம். 360 பேர்ஒரே நாளில், சேர்ந்துள்ளீர்கள்.மேலும், திருப்பூரிலிள்ள 108 பள்ளிகளிலிருந்து, 2,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவுள்ளனர்.
கலெக்டர் கோவிந்தராஜ்:
கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், “மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். எந்நேரத்தில் எது நடக்கும் என்பதை கனிக்க முடியாத அளவுக்கு ரோடுகளில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது.இந்த படையில் சேருவோற்க்கு தன்னம்பிக்கை, தலைமை பண்பு, மனதை ஒருமுகப்படுத்தும் பாங்கு, சேவை மனப்பான்மை, ஒழுக்கம் வளரும். மாணவர்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. . சிறிய தவறும் பெரியதாக மாறும். ஆகவே, தவறு ஏற்ப்படாதவாறு பணிபுரிய வேண்டும்.” என்று கூறினார்.
முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 360 மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சிக்னல் கவாத்து பயிற்சி முன்னதாகவே நடந்தது.
Students in Road Safety Corps
Yesturday, in Tirupur city, Students are deployed in the “Road Safety Corps” to control road traffics. In first phase of this process, 360 students from 12 Schools were joined in “Road Safety Corps”. Also 2,000 boys and girls from 108 schools in Tirupur are going to join in this Road Safety Corps”. Its opening ceremony was took place yesterday in the Nanjappa Corporation School Ground. Chief Educational Officer Anandi topped the function and Law-Order Deputy Commissioner of Police, Mr. Thirunavukarasu welcomed the function. Also Commissioner Seshasai and Collector, Govindaraj were talked to the students. Earlier, the selected students were took the parade and practices.
Advertisement: To purchase approved plots in and around chennai, Click here