நாடாளுமன்றத்தில் உறங்கிய ஆந்திர எம் பி

Member of parliament in deep sleep at parliament Cong MP Caught Sleeping In Indian Parliament நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்ஜான் அன்று கடந்த 9ம் தேதி  ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார். இதற்கு முதலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான்…

Read More நாடாளுமன்றத்தில் உறங்கிய ஆந்திர எம் பி

அவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியது தொடர்பாக கேப்டன் டிவி ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் குறித்து செய்தி ஒளிபரப்பானது. அதில், முதல்வர் குறித்தும், மக்கள் பணம் ரூ. 7.25 கோடியை தேவை இல்லாமல் செலவழிப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி ஆதாரம் இல்லாமலும், உறுதிப்படுத்தாமலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்று கூறி முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் கேப்டன் டிவி செய்தி வாசிப்பாளர் மைதிலி கண்ணன், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த…

Read More அவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்கு

நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்

Defamation case filed against Rahul Gandhi in Muzaffarpur Bihar

இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார். பிரதமரின் சுதந்திர தின உரை திருப்தியாக இல்லை. இவரது பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்ப நலனில்…

Read More நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்

விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார். மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி…

Read More விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்

நாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை

Dowry harassment in  Namakkal -The young girl committed suicide நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்த மாதேஸின் மகன் சோமசுந்தரம் (32) சேலம் வருமானவரித்துறை அலுவலக தாற்காலிக கார் ஓட்டுநர்.  இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சிற்றுந்து ஓட்டுநராக பணியாற்றிய போது ராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் அகிலா(20) என்பருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நாமக்கல் அருகே முருகன்கோயில் பகுதி என்ஜிஜிஓ காலனியிலுள்ள வனஅலுவலர் வரதராஜன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு மனைவியை, சோமசுந்தரம் கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அகிலா கொடுத்த புகார்படி போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி…

Read More நாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை

67-வது சுதந்திர தின கொண்டாடம்

67 INDEPENDENCE DAY CELEBRATION 67-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு  பிரதமர்  மன் மோகன் சிங்  செங்கோட்டையில் தேசிய  கொடியேற்றினார். காலை 7.30 மணி அளவில் செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். 21 குண்டகள் முழங்க பிரதமர் மூவர்ணக் கொடியேற்றினார். இதனையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திவருகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

Read More 67-வது சுதந்திர தின கொண்டாடம்

நடிகர் விஜய் தொலைக்காட்சில் நேரடியாக உணர்வுகள் பகிர்வு

Actor vijay in television தலைவா படம் நாளுக்கு நாள் பல பிரச்சனையில் சிக்கி வரும் நிலையில் இன்று நடிகர் விஜய் தொலைக்காட்சி வாயிலாக நேயர்களுடன் தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் அவர் கூறுகையில் தலைவா படம் தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் அனைத்து இடத்திலும்(கேரளா, கர்நாடக, ஆந்திரா, வடஇந்தியா)வெளிவந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் திருட்டு டிவிடி மூலம் படம் தமிழ் நாட்டில் பரவி வருகிறது இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது, மிகந்த சிரமத்திலும் பெரிய பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட திரைப்படம் ரசிகர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டில் வெளியாகும் வரை தயவு செய்து பொறுமை காக்கவேண்டும் தமிழ் நாட்டில் இந்த படத்தை வெளியிட முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு உள்ளோம் அது கிடைத்து இப்படம் இங்கு விரைவில் வெளியிடப்படும் அது வரை யாரும் திருட்டு…

Read More நடிகர் விஜய் தொலைக்காட்சில் நேரடியாக உணர்வுகள் பகிர்வு

நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு

High voltage electricity to consumers using electrosection Time Reduction தமிழகத்தில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் இன்று முதல் மின்வெட்டு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தற்போதுள்ள 90 சதவிகித மின்வெட்டு 40 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதி வரை இது அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு மின்இருப்பைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு நேரம் தீர்மானிக்கப்படும் என்றும்…

Read More நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு

விரைவில் காற்றில் இருந்து நீர் உற்பத்தி- மதுரை மானகராட்சி முடிவு

தமிழ்நாட்டில் முதன் முறையாக காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை நடைமுறைப்படுத்த மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட ’வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம் அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. அதிலும் குழாய் இணைப்பு நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, ’திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,’ பணிகளை அந்த இயந்திரமே செய்து முடிக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில் ’வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியல் முதல் 32 டிகிரி செல்ஷியசிலும் ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில் திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும். மேலும்…

Read More விரைவில் காற்றில் இருந்து நீர் உற்பத்தி- மதுரை மானகராட்சி முடிவு

ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.

14 year old boy dead in Rail accident மும்பையில் ஒடும் ரயிலில் சிறுவன் ஒருவன் சாகசம் காட்டுகிறேன் என்று நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், பெரும் நகரங்கள் சென்னை மும்பை போன்ற இடங்களில் இளைஞ்சர்கள் இதுபோல சாகசம் செய்கிறோம் என்று உயிரை விடுவது அதிகமாகி வருவதாகவும்,ரயிலில்…

Read More ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.