Prime minster Manmohan singh arrived Trichy
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார்.