அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்பு

Nearly 12000 women raped in Assam in 8 years

கவுகாத்தி : அசாமில், கடந்த எட்டு ஆண்டுகளில், 12,000க்கும், மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.  59 பேர் பலாத்கார கொலை : நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2005 முதல் 2013 மே வரையிலான, எட்டு ஆண்டுகளில், 12 ஆயிரத்து 857 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், 59 பேர் பலாத்காரத்திற்கு பின், கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாநில உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 8,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி, படிப்பின்மை போன்ற காரணங்களாலும், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க, போதிய அளவிலான அதிகாரிகள் இல்லாததும், பாலியல் பலாத்காரங்களுக்கு முக்கிய காரணம். இது தவிர, வரதட்சணை கொடுமை, பெண்கள் கடத்தப்படுவது உள்ளிட்ட பல வகைகளிலும், பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விழிப்புணர்வு பிரசாரம் : இவ்வகை குற்றச் செயல்களை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநில அரசின் சார்பில், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும், முதலமைச்சரின், 2016 தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ், 30 பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. காவல் துறை உயர் அதிகாரிகள் இதை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு உள்துறை அதிகாரிகள் கூறினர்.

Nearly 12000 women raped in Assam in 8 years

Related posts