தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

modification in right to information act

புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:

மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தொலை தொடர்புத் துறையில், 74 சதவீத அளவுக்கு உள்ள, அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக அதிகரிப்பது உட்பட, 12க்கும் மேற்பட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க, ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
 “தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும்’ என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது, அரசியல் கட்சிகளுக்கு பலத்த, தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. அதனால், அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தகவல் உரிமைச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம் என, சமீபத்தில் தகவல் வெளியாகின. அது தற்போது உண்மையாகியுள் ளது. தகவல் உரிமைச் சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வர, நேற்று அமைச்சரவை அனுமதி அளித்தது. 
 இந்தியன் ஆயில் நிறுவனத்தில், அரசுக்கு உள்ள பங்குகளில், 10 சதவீத பங்குகளை விற்க, ஒப்புதல் தரப்பட்டது. இதன்மூலம், 3,750 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. * “மல்டி பிராண்ட்’ சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், விதிமுறைகளை தளர்த்தவும், அமைச்சரவை அனுமதி அளித்தது. 
பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
modification in right to information act
 

Related posts