மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஒருதலையான உத்தரவு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) முன் சவால் செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம்

டெல்லி:ஷியூர் சாகர் கர்கானா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையிலான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியாது என்று தெரிவித்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts