ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார். “இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்’ என ஜோதி ஆம்கே தெரிவித்தார். இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.…
Read More பெரிய புத்தகம் சிறிய உருவம் சாதனை படைத்த ராஜஸ்தான் பெண்.பீகார் மாநிலத்தில் கொடூரம் ரயில் மோதி 20 பேர் பலி
aug-19. பீகார் மாநிலம் பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 சிவ பக்தர்கள் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர். பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பாமரா ரெயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்பகுதியில் யாத்திரை செய்ய வந்திருந்த சிவ பக்தர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் வேகமாக மோதியது. இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கியும், தூக்கி வீசப்பட்டும் 20 சிவ பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோவம் அடைந்த அப்பகுதி மக்கள் ரயிலை அடித்து நொறுக்கி இஞ்சினுக்கு தீ வைத்து எரித்தனர் மற்றும் ரயிலை ஓட்டிய…
Read More பீகார் மாநிலத்தில் கொடூரம் ரயில் மோதி 20 பேர் பலிதமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி
Chess training for Tamilnadu Government School teachers திருப்பூர்: தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகளில் செஸ் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி தரப்படுகிறது. தாராபுரத்தில் 444 ஆசிரியர்கள், உடுமலையில் 241, திருப்பூரில் 549 என மொத்தம் 1,234 ஆசிரியர் களுக்கு வரும் 20ம் தேதி, அந்தந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 23ம் தேதி நடக்கும் போட்டிக்கு முன்னதாக, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை,…
Read More தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சிஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம்
AP government invokes ESMA ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 17 நாட்களாக, போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதால் 13 மாவட்டங்களில் பேருந்து சேவை முடங்கி உள்ளது. இந்த நிலையில் நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி மின்துறை ஊழியர்களும் போராட்டத்தில் இறங்க உள்ளனர். இதனிடையே அரசு ஊழியர்களின் போராட்டத்தை முறியடிக்க ஆந்திர அரசு ‘எஸ்மா’ சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. AP government invokes ESMA; ‘no work, no pay’…
Read More ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம்அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான்: ராமதாஸ் அறிக்கை
Dr.Ramadass blames aiadmk Government அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான் என்று கூறும் அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அடுக்கடுக்கான அடக்கு முறைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட 144 தடையாணை, இடையில் சில பகுதிகளில், சில வாரங்கள் தளர்த்தப்பட்டதை தவிர, 10 மாதங்களாக நீடிக்கிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட 144 தடையாணையும், இடையில் சில நாட்கள் தளர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை. இதனால், இம்மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியாளர்களின் தவறுகளை கண்டித்து குரல் கொடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கடமையாகும். ஆனால், இந்தக் கடமையைக் கூட செய்யவிடாமல் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை…
Read More அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான்: ராமதாஸ் அறிக்கைசிந்துரக்சக் நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
Bodies were recovered by divers on Friday morning from the INS Sindhurakshak மும்பையில் வெடித்து சிதறிய சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பகுதிக்குள் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்து நடந்த போது, கடற்படையை சேர்ந்த 3 அதிகாரிகளும், 15 வீரர்களும் இருந்தனர். கப்பல் வெடித்த போது அதிகளவில் வெப்பம் ஏற்பட்டு, இரும்பு கதவுகள் உருகிவிட்டது. மேலும் விபத்து காரணமாக கப்பலுக்குள் அதிக வெப்பநிலையில் தண்ணீர் சூடேறி இருக்கிறது. இதனால் கப்பலில் சிக்கிய 18 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதிக வெப்பநிலை காரணமாக உடல்கள் கருகி உலைக்குலைந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து கப்பலுக்குள் மூழ்கிய வீரர்களின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.…
Read More சிந்துரக்சக் நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பேரின் உடல்கள் மீட்புநினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை!!!
Onion price go high in India இந்தியாவில் வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்ந்ததையடுத்து ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவில் கிலோ ஒன்றுக்கு ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.56 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.60 ஆகவும், சென்னையில் ரூ.75ஆகவும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அடுத்த 15 நாட்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நுகர்பொருள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து கே.வி.தாமஸ் கூறுகையில், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் டன்னுக்கு 650 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சமாளித்து வெங்காய வரத்து அதிகரிக்க செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியார்…
Read More நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை!!!பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்
Prime Minister Manmohan Singh has said that globalization is not going to abandon the policy. டில்லியில் ரிசர்வ் வங்கி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் , இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் கொள்கை திரும்ப பெறப்பட மாட்டாது என்று கூறினர் . 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி யாக இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் அந்நிய செலவாணி விகிதம் ஒரே நிலையாக இருந்தது, தற்போது இது சந்தைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால் அந்த சூழல் எழாது. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்திவிட்டாலே இது சரியாகிவிடும் என்று பிரதமர் தெரிவித்தார் . 1991ல் ஏற்பட்ட நெருக்கடியின்போது நம்மிடம் 15 நாட்களுக்கு மட்டுமே அன்னியச் செலாவணி கையிருப்பு இருந்ததாகக் கூறிய பிரதமர்,…
Read More பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்வீராணம் ஏரி நாளை திறப்பு
Viranam Lake opening tomorrow சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935 மில்லியன் கன அடி நீர் உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Viranam Lake opening tomorrow
Read More வீராணம் ஏரி நாளை திறப்புவிவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை
swamy vivekananda life history இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்- சுவாமி விவேகானந்தர் இந்தியா பல சமயத்தலைவர்களை தற்போது கண்டு கொண்டிருந்தாலும் சுவாமி விவேகானந்தர் போல ஒரு தலைவர் இனி வருவாரா? என்றே ஏங்கிக்கொண்டிருக்கிறது. தேச முன்னேற்றம் என்பது இளைஞர்களின் தோல்களிலேயே இருக்கிறது. 100 இளைஞர்கள் தன்னுடன் இருந்தால் இந்த தேசத்தை எல்லா விதத்திலும் முன்னேற்றி காட்டுவேன் என சபதம் விடுத்தார் விவேகானந்தர். காவித்துணிகளை உடுத்திக்கொண்டு காம லீலைகளில் ஈடுபடும் இன்றைய சாமியர்கள் மத்தியில் வீரத்துறவியாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளில்(12.1.1863) அவரை சற்று நினைவு கூர நாம் கடமைப்பட்டுள்ளோம். பிறப்பு, வாழ்க்கை விவேகானந்தர், 1863 ஜனவரி 12ம் தேதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும்,…
Read More விவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை


