fire accident near sivakasi
சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலிபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
fire accident near sivakasi
Major fire accident in a cracker factory at Duraisamypuram village near Sivakasi. M.Duraisamypuram village famous for manufacturing crackers in south india. These accidents happen every month in this area