தலைவா அரசியல் படம் அல்ல நடிகர் விஜய் கருத்து

thalaiva film is a commercial movie only its not touch politics. actor vijay

தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். ‘தலைவா’ படம் 9-தேதி தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். இதற்கு இடையில் சென்னையில் அபிராமி, சத்தியம், ஐநாக்ஸ் உள்ளிட்ட 9 திரையரங்குகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையொட்டி அந்த தியேட்டர்களில் முன்பதிவுக்கு ரசிகர்கள்யாரும் வரவில்லை. வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்தான் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalaiva film is a commercial movie only its not touch politics. actor vijay

Related posts