அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார்.
இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார்.
ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
Obama meet Putin is canceled because of snowden
இதையும் படியுங்கள்
- புதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்
- உலகக் கோப்பை ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
- தலைவா அரசியல் படம் அல்ல நடிகர் விஜய் கருத்து
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: தலைவா அரசியல் படம் அல்ல நடிகர் விஜய் கருத்து
அடுத்த செய்தி →: புதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்
