வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம் டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related posts