உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கூடுதல் இடமாற்றங்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

டெல்லி :உச்சநீதிமன்ற கொலீஜியம் 2020 மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி திரு அலோக் சிங்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.என். சத்யநாராயணாவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு.பரிந்துரைத்துள்ளது.

பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் மோர் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரவி விஜயகுமார் மாலிமத்தை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

Related posts