மோசடி வழக்கில் முன்னால் அதிமுக எம்பி கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி – சிறப்பு நீதிமன்றம்

சென்னை :அதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். கல்லுாரியை விரிவாக்கம் செய்ய ராமச்சந்திரன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளராக இருந்த தியாகராஜன் மூலம் விண்ணப்பத்தை விதிகளுக்குட்பட்டு, முறையாக கையாளாமல் 20 கோடி கடன் பெற்றுள்ளார் .இதற்கு லஞ்சமாக தியாகராஜன் குடும்பம் அமெரிக்கா செல்வதற்குமான விமான டிக்கெட் தொகை 2.69 லட்சத்தை அறக்கட்டளையிலிருந்து ராமச்சந்திரன் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.வங்கி மேலாளர் மற்றும் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி டி.லிங்கேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னால் அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

Related posts