திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

Madras high court in Chennai | திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனத்திற்கு நுழைவு கட்டணத்தை ஒப்பந்தம் அடிப்படையில் வசூலித்து வந்தனர்.மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி13 ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார்.நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர். இதற்கு பதில் அளிக்க நகராட்சி நிர்வாகம் ,குடிநீர் வழங்கல் துறை செயலாளர், திருவேற்காடு நகராட்சி ஆணையர் மற்றும் அட்மிஷன் வாட்டர் சப்ளை டிபார்ட்மென்ட் ஏப்ரல் மாதம் 1 ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

Related posts