INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. 260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும். இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும்…
Read Moreகடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்
India launched its first aircraft carrier INS Vikrant உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது . இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் . Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France,…
Read Moreசுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி பாஜகவில் இணைந்தது
Subramanian Swamy Janata Party merges with BJP புதுதில்லி:12.ஆகஸ்ட்.2013: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார். ஜனதா கட்சித் தலை வர் சுப்ரமணியசாமி, பாஜ தலைவர்களுடன் சமீபகாலமாக நெருக்கமாக காணப்பட்டார். இந்நிலை யில், தனது கட்சியை பாஜ.வுடன் இணைப்பது பற்றி அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொ டர்ந்து, பாஜ.வுடன் ஜனதா கட்சி இணைக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும்…
Read Moreஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.
Odessa Makanati soil decline in coal mining company ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது குல்டா வசுந்தரா என்ற கனிம சுரங்கம். இது மகாநதி சுரங்க பணிகள் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தின் நுழைவு வாயிலின் அருகே, நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, திடீரென சரிந்து விழுந்தது. இதில் 10 பேர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பலியாயினர். மேலும் 30 பேர் வரை மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என,…
Read Moreசென்னை, அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரி
Oscar winning A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வெள்ளிக்கிழமை சென்னை, அரும்பாக்கத்தில் துவங்கினார். இசையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இந்த கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி,கோத்தார் குடும்பத்தினர், சுஹாசினி மணிரத்னம், ஒளிப்பதிவாளரும், இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் பரத்பாலா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகன்கள் மற்றும் கே.எம் இசைக் கல்லூரிமாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated
Read Moreஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
Sterlite to continue operations புதுடெல்லி, ஆக. 09: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியதால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக 29-ந் தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி சுவதேந்திரகுமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மே 31-ந் தேதி தீர்ப்பாய நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் 4 பேர் கொண்ட குழு ஆலையில் ஆய்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல்…
Read Moreபுதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியா மருத்துவமனையில் அனுமதி
Puducherry Lieutenant governor Kataria Puducherry Lieutenant governor Kataria admitted to hospital in Chennai புதுச்சேரி, ஆக. 8- : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த இக்பால் சிங் மாற்றப்பட்டு, புதிய ஆளுநராக வீரேந்திர கட்டாரியா கடந்த மாதம் 10-ம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. Puducherry Lieutenant governor Kataria admitted to hospital in Chennai Lieutenant Governor Virendra Kataria was taken to a private hospital in Chennai after he complained of…
Read Moreஉலகக் கோப்பை ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
cash reward for Rani Rampal ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தொடர்நாயகியாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். ஜெர்மனியின் மான்செங்லாட்பச் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய அணி வெண்கலம் வென்றதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றிருந்த ராணி ராம்பால் உள்ளிட்ட 6 ஹரியாணா வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்தார். இந்த நிலையில் தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டதற்காக ராணி ராம்பாலுக்கு மேலும் ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து…
Read Moreபுதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்
அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புதிய டைனொசோர் (Dinosaur) இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர் ஐந்து மீட்டர் நீளம் வளரக்கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது. மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இதற்கு இருந்துள்ளது. இந்த ராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என யூட்டா பல்கலைகலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மிருகத்துக்கு நாசூட்டுசெர்ராடாப்ஸ் டைட்டுசை (Nasutoceratops titusi) என்று பெயரிடப்படுள்ளது. வித்தியாசமான உடல் வாகுடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு மிருகமாக இது இருந்துள்ளது என்றாலும் இது ஒரு தாவர-உண்ணி விலங்குதான்.
Read Moreஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்து
அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார். அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார். ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின்…
Read More



