Subramanian Swamy Janata Party merges with BJP
புதுதில்லி:12.ஆகஸ்ட்.2013: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார். ஜனதா கட்சித் தலை வர் சுப்ரமணியசாமி, பாஜ தலைவர்களுடன் சமீபகாலமாக நெருக்கமாக காணப்பட்டார். இந்நிலை யில், தனது கட்சியை பாஜ.வுடன் இணைப்பது பற்றி அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொ டர்ந்து, பாஜ.வுடன் ஜனதா கட்சி இணைக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். சுப்பிரமணியன் சுவாமியும், அவரது கட்சியும் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது பலனளிக்கும் என்று நம்புகிறேன். அவரை வரவேற்கிறேன் என்றார் சிங்.
இணைப்பு செய்தியை வெளியிட்ட சாமி கூறுகையில், “”பா.ஜ., தலைவர்கள், என்னை அவர்கள் கட்சியில் சேர்க்க சம்மதம் தெரிவித்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். நாடு, தற்போதுள்ள இக்கட்டான நிலையில், ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம். என் கட்சியினருடன் சேர்ந்து, புதிய இந்தியாவை உருவாக்க, பா.ஜ., தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவேன்,” என்றார்.
Subramanian Swamy Janata Party merges with BJP
Subramanian Swamy on Sunday announced the merger of his Janata Party with BJP ahead of the 2014 general elections. “I welcome Subramanian Swamy in the BJP,” Rajnath Singh told reporters while announcing the merger. wamy expressed happiness over the development and said, “I am glad. I have been in the Jan Sangh. I hope to work together with my colleagues,” he told reporters. The BJP chief said, “it is time for a nationalist focus”. He added, “I believe this will benefit the party.” The announcement was made by Swamy in the presence of BJP president Rajnath Singh, Leader of Opposition in Rajya Sabha Arun Jaitley and former BJP chief Nitin Gadkari. Ahead of the merger, Swamy held discussions with senior BJP leaders at Rajnath Singh’s residence, who accepted the merger of his party in BJP and hoped it will make BJP stronger.