19 year old boy driving a solo flight alone around the world. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி வர திட்டமிட்டார். இவருக்கு வயது 19. இவர் ஒரே என்ஜீன் உள்ள குட்டி விமானத்தைதில் தனியே ஓட்டி உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். ஜூன் 30ம் தேதி இலகு-ரக விமானத்தில் ஆஸ்திரேலியா, நியூ வேல்ஸ் பகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். விமானத்தில் 70 நாட்கள் தொடர்ந்து பயணித்து ரேயான் உலகின் அனேக இடங்களையும் சுற்றி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். வுல்லான்காங் நகரில் இருந்து தொடங்கிய விமான பயணத்தை 14 நாடுகளுக்கு 200 மணி நேரம் விமானத்தில் சுற்றி 70 நாட்களில் 44,448 கி.மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் விமானத்தை தனியாக இயக்கி உலகத்தை சுற்றிய மிகச் சிறிய வயது வாலிபர் என்ற சாதனையை செய்து இதற்கு முன் படைத்த சாதனையான அமெரிக்காவை சேர்ந்த ஜேக் வீகன்ட் வயது 21 செய்த சாதனையை 19 வயதிலேயே செய்து முறியடித்தார். 19…
Read More 19 வயது வாலிபர் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி சாதனைநிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவு
CBI search results in the Ministry of Coal மத்திய அரசுக்கு நிலக்கரி சுரங்கங்களின் நடந்த முறைகேடான ஒதுக்கீடுகளில் 1.86 லட்சம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டது என கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் நிலக்கரி ஊழல் சம்பதமான முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக மத்திய அரசு தெரிவித்தது. அதனை கண்டுபிடிப்பதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் இன்னும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரத்திற்குள் நிலக்கரி ஊழல் சம்பதமான அவணங்களை சி.பி.ஐ க்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் பல முறை நினைவு படுத்தியும் ஆவணங்களை கொடுக்காததால், சி.பி.ஐ., நிலக்கரித்துறை அமைச்சகத்தில் சோதனை செய்ய திட்டம் வகுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய , இந்த ஆவணங்கள் அவசியம் தேவை என சி.பி.ஐ வட்டாரம் தெரிவிக்கிறது. நிலக்கரி அமைச்சகம், குறிப்பாக 2006 முதல் 2008 ஆண்டு ஆண்டிற்கு உண்டான கோப்புகளை கொடுக்க மறுக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், இந்த காலகட்டத்தில்தான் இந்த அமைச்சகத்தை நடத்தி…
Read More நிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவுஇலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளை
Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com
Read More இலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளைஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்
Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son தனது மகனுக்கு தொல்லை கொடுக்காமல் நிம்மதியாக செயல் பட அனுமதிக்குமாறு ஊடகங்ககளை சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், 14 வயதுக்குட்பட்ட கிரிகெட் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் திறமையாக விளையாடவில்லை என பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஊடகங்களில் டெண்டுல்கரின் மகன் குறித்து பலவிதமாக கருத்துகளை எழுதத் தொடங்கியுள்ளனர். இதனால் சங்கட்டதிற்குள்ளன சச்சின் டெண்டுல்கர் ஊடகங்களுக்கு எனது மகன் அர்ஜுனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான். என்னை அவனுடன் தயவு செய்து ஒப்பிட்டு பார்க்கவேண்டாம், அவனை ஒரு சாதாரண சிறுவனை போன்று பாருங்கள். இந்த செய்திகள், பொறுப்புள்ள…
Read More ஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்ஆதார் கார்டு கட்டாயமாக தேவை புதிய சிம் கார்டு பெற
Coming soon, instant mobile ID verification via Aadhaar புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Coming soon,…
Read More ஆதார் கார்டு கட்டாயமாக தேவை புதிய சிம் கார்டு பெறகுடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது இந்திய நகரங்களில்
22 of India’s 32 big cities face water crisis சமீபகாலமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய பெரும் நகரங்களில் அன்றாட குடிநீர் தண்ணீர் தேவை பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது என்று தெரிய வருகிறது.. இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. கான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட்,…
Read More குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது இந்திய நகரங்களில்இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்
CAG unearths Rs 17,000 crore scam in railways :ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், அதிகாரம் மிக்க பதவியை பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்ச ரூபாய் , லஞ்சம் பெற்றவழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார்…
Read More இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் கலவரத்தில் 12 பேர் பலி
UP: Situation tense in Muzaffarnagar as death toll climbs to 21, curfew imposed உ.பி. மாநில முஜாபர்நகர் வன்முறைப் பகுதிகளில் ராணுவம் நெற்று கொடி அணிவகுகுப்பு நடத்தியது. இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு 12 பேர் கொல்லப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பிறகு இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இதே போல இந்த மோதலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா…
Read More உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் கலவரத்தில் 12 பேர் பலிஇளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைது
Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்’ சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர். இதனால் சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம் அடைந்தார். இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர். இதனால் துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து…
Read More இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைதுமதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை
A Husband killsed his wife’s paramour near Chennai மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் பெயிண்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தவர் சதீஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடைக்கு வந்து சென்றபோது சதீஷ்– புவனேஷ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி தெரிந்ததும் சக்திவேல், மனைவியையும், கள்ளக்காதலன் சதீசையும் கண்டித்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பல நாட்கள் சக்திவேல் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வரி, பக்கத்து…
Read More மதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை

