இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்

CAG unearths Rs 17,000 crore scam in railways

CAG unearths Rs 17,000 crore scam in railways

:ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், அதிகாரம் மிக்க பதவியை பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்ச ரூபாய் , லஞ்சம் பெற்றவழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணை, தற்போது நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ரயில்வேயில் மற்றொரு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரயில்வே சரக்கு போக்குவரத்தில், உள்நாட்டு பயன்பாட்டுக்கு போக, ஏற்றுமதியை ஊக்கும்விக்கும் முகமாக, உள்நாட்டு கட்டணத்தில் சரக்குகளை அனுப்பும் இரட்டை முறையை அறிமுகப்படுத்தியது. இதை பயன்படுத்தி, இரும்பு தாது ஏற்றுமதி செய்பவர்களிடம், குறைந்த கட்டணம் வசூலித்து, அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த, 2008 முதல், 2012 வரையிலான ரயில்வே துறை செயல்பாடுகள் குறித்து, சி.ஏ.ஜி., ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளார். அதில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.தென் மேற்கு, தென் கிழக்கு, கிழக்கு ரயில்வே மண்டலங்களில், இரட்டை போக்குவரத்து கொள்கை நடைமுறையை தவறாக பயன்படுத்தி, ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரயில்வே அதிகாரிகள் முறைகேடு செய்து, 17 ஆயிரம் கோடிக்கு ஊழல் புரிந்துள்ளனர்.இதனால், ரயில்வே துறைக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த, முறைகேடு நடந்த கால கட்டத்தில், ரயில்வே துறைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இது குறித்து,விரிவாக விசாரணை நடத்தப்பட்டால் தான் உண்மைகள் வெளியே வரும்.

CAG unearths Rs 17,000 crore scam in railways

The Comptroller and Auditor General (CAG) has unearthed another big scam – this time in the railways.

A test audit has showed exporters misused the railway’s dual policy for transportation of iron ore leading to a loss of around Rs.17,000 crore, said a newspaper report on Sunday.

The CBI is already probing the scam that began in May 2008.

The genesis of the scam came with the policy that allowed transportation of iron ore for domestic consumption at much lower costs compared to export. Naturally, the exporters misused the rule.

The CAG has told the railway ministry that in some of the cases, recoverable dues amounted to Rs.17,000 crore. The figure could go higher if details of all loading and unloading points were audited.

The test audit was done in South Eastern, South Western, and East Coast for transportation between 2008 and 2012.

The scam was made possible by collusion between railway staff and parties.

In many cases, by not submitting required documents, exporters were able to transport iron ore at domestic rates.

Related posts