ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்

Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership

புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையின் கீழ்  பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால்  மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு சென்று நேற்று நாடு திரும்பினார். அவர் சிறப்பு விமானத்தில் அளித்த பேட்டி பின்வருமாறு :வரும் மக்களவை தேர்தலுக்கு பின், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையில் பனியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அரசியலில் நிரந்தர பகைவர்களும் நண்பர்களும் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பு மிக்க உறுப்பினராக காங்கிரஸ்சில் அவர் இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றது காங்கிரஸ் கட்சிக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. ஒருமித்த கருத்துள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது.

Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது இம்மாத இறுதியில், அங்கே வரும் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரீபை சந்திப்பது சம்பந்தமாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அருகாமையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் என்ற வகையில் நவாஸ் ஷெரீப் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் பாகிஸ்தான் மீது பல கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவை இந்தியநாட்டின் மீது தீவிரவாத தாக்குதல்களை நிறுத்தவில்லை. மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த குற்றவாளிகளை தண்டிப்பதற்க்கு உண்டான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்ட முற்பட வில்லை. இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிக்க வருத்தமளிக்கிறது. மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விளக்கமளித்தேன். நான் ஒரு திறந்த புத்தகம், நான் எதையும் நாடாளுமன்றத்தில் மறைக்கவில்லை. ஆந்திராவில் தெலங்கானா மாநிலம் உருவாக்க முடிவு செய்தது போல் மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா மாநிலம் அமைப்பது குறித்து தமது அரசு பரிசீலிக்கவில்லை. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

Rahul is the Best prime minister candidate in Congress party

Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership

He said that Rahul Gandhi is very good administrator and love to work under him. Rahul is the Best prime minister candidate in Congress party.

Related posts