Rahul gandhi sent birthday greeting to DMDK chief Vijayakanth
25 ஆகஸ்ட் 2013: இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, டெலிபோனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். செய்தியாளர்கள் கூட்டத்தில், வரும் 2014- தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்டனர். முதலில் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கிறேன் என்றார். அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.