ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டது: பாஜக

UPA has pushed the nation hundred years back: Naqvi

நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறான கொள்கைகளால் நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாரதீய ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான 10 வருட ஆட்சியானது நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டு இருக்கிறது. நாங்கள் உலகில் சிறந்தது என்று சொல்வது வழக்கம். ஆனால், இப்பொழுது உலகில் மிகவும் பின் தங்கிய என்று அது மாறியிருக்கிறது.

நாடு மிகப்பெரிய பொருளாதாரப் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய அரசியல் பெருந்துயரமாக மாறியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. பொருளாதார உலகமயமாக்கல் உலகக்கடனில் திருப்பி விடப்பட்டிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சியினர் நாட்டை தவறான பாதையில் கொண்டு செல்லும் காங்கிரஸ் அரசிற்கு முடிவு கட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். மோடி குஜராத் மாநிலத்தின் ஆட்சியின் அதிகாரத்திற்கு மட்டும் வரவில்லை. அவர் குஜராத் மாநிலத்தில் ஒரு முறையான மாற்றத்தையும் கொண்டு வந்து இருக்கிறார். மோடியின் பாதையில் உள்ள முட்கள் காங்கிரசின் சவப்பெட்டிக்கு ஒரு ஆணியாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என குறிப்பிட்டார்.

English Summary:

UPA has pushed the nation hundred years back: Naqvi

RAMPUR: BJP Vice President Mukhtar Abbas Naqvi today attacked the Congress-led UPA government, alleging the country has been pushed back by 100 years during its decade-long “misrule.” “The country has been pushed back by 100 years during the decade-long misrule of the UPA. Earlier, we used to say saare jahan se achcha (best in the world), now it has become saare jahan se pichhda (the most backward in the world) Hindustan harama,” Naqvi said at a workers’ convention here.

Visit: http://www.bestsquarefeet.com for Real estate Requirements in Chennai

Related posts